Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

உணவு, தங்குமிடம் தெரிந்துகொள்ள கூகுள் மேப்ஸ்-ல் ஏற்பாடு.! எப்படி தெரியுமா?

கூகுள் நிறுவனம் பயனர்களுக்கு தகுந்தபடி சிறப்பான சேவையை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும், இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய புதிய வசதிகள் பல்வேறு மக்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது.

கூகுள் மேப்ஸ்

அதன்படி கோவிட்-9 ஊரடங்குக்கு மத்தியில் இந்தியாவின் 30நகரங்களில் உணவு முகாம்கள் மற்றும் இரவு தங்குமிடங்களின் இருப்பிடத்தை கூகுள் மேப்ஸ் இப்போது காண்பிக்கும். இந்த நிவாரண மையங்களின் இருப்பிட விவரங்களை வழங்க மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுடன் நெருக்குமாக செயல்படுவதாக கூகுள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கூகுள் தேடல்

எனவே அருகில் இருக்கும் மையத்தை கண்டுபிடிக்க பயனர்கள் கூகுள் தேடல் அல்லது கூகுள் மேப்ஸ் தளத்தில் Food shelters in 'city name'

அல்லது Night shelters in 'city name' என்று டைப் செய்து தேட வேண்டும். இந்த அம்சம் விரைவில் இந்தி மொழியிலும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. பின்பு பிராந்திய மொழிகளில் விரைவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் அதிகமான நகரங்களில் கூடுதல் தங்குமிடம் விவரங்களையும் சேர்க்கவும் இது திட்டமிட்டுள்ளது பின்பு விவரங்கள் மற்றும் இருப்பிடங்களைத் தவிர, அம்சங்களைக் கொண்ட பயனர்களுக்கு கூகுள் இந்த தகவலை எளிதாக அணுக வழி செய்கிறது. அதாவது விரைவான அணுகல் குறுக்குவழிகளை (( quick-access shortcuts)உருவாக்குவதும் இதில் அடங்கும்.

இது கூகுள் மேப்ஸ் தேடல் பட்டியலில் சற்று கீழே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் தவிர,பயனர்கள் கூகுள் தேடல் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் வழியாக இந்த இருப்பிடங்களை பார்க்கலாம், இந்த அம்சம் ஸ்மார்ட்போன்களில் கூகுள் அசிஸ்டெண்டிலும் KaiOSஅடிப்படையிலான ஜியோபோன் போன்ற சாதனங்களிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 நிலைமை தொடர்ந்து கவலை கொடுக்கும் இந்த வேளையில், மக்களுக்கு உதவும் தீர்வுகளை உருவாக்க நாங்கள் ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் மேப்ஸில் உணவு மற்றும் இரவு தங்குமிடங்களின் இருப்பிடங்களை முன்னிலைப்படுத்துவது இந்தத் தகவலை தேவைப்படும் பயனர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதற்கான ஒரு படியாகும், மேலும் அரசாங்க அதிகாரிகளால் வழங்கப்படும் உணவு மற்றும் தங்குமிடம் சேவைகளை அவர்கள் பெற முடியும் என்பதை உறுதிசெய்கிறது.

இருந்தபோதிலும் பல்வேறு மக்கள் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் சாதனத்தை அணுக முடியாது,எனவே அவர்களுக்கு தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் உதவியுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த முக்கியமான தகவலை தெரிவிப்போம் என்று நம்புகிறோம் என கூகுள் இந்தியாவின் உயர்மட்ட மேலாளர் அனல் கோஷ் அவர்கள் கூறியுள்ளார்.கூகுள் மேப்ஸ் டெல்லி பயனர்களுகக்காக இதேபோன்ற அம்சத்தை வெளியிட்டுள்ளது, அது என்னவென்றால், ஒரு பயனர் இருப்பிடத்தின் Pincode ஐ தட்டினால், கூகுள் மேப்ஸ் நிவாரண மையத்தின் முழுமையான முகவரியையும்தேவையான தகவல்களையும் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக