செவ்வாய் கிரகத்தில் நம்பமுடியாத உருவம்
செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழச் சாத்தியக்கூறு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இன்னொரு புறம் பூமி தவிர மற்ற கிரகங்களில் உயிர் அடையாளங்கள் எதுவும் கிடைக்குமா என்று இன்னொரு ஆராய்ச்சி குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் தேடலின் போது நம்பமுடியாத ஒரு உருவத்தைச் செவ்வாய்க் கிரகத்தில் நாசா கண்டுபிடித்துள்ளது.
நாசாவின் மார்ஸ் ரெக்கொன்னைசன்ஸ் ஆர்பிட்டர்நா
சாவின் மார்ஸ் ரெக்கொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) கடந்த சனிக்கிழமை அன்று செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்பட்ட ஒரு பெரிய ராட்சஸ டிராகன் போன்று தோற்றமளிக்கும் உருவத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஹைரைஸ் (HiRISE) கேமராவால் இந்த புகைப்படம் படம்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எப்போது இந்த படம் படம்பிடிக்கப்பட்டது என்பதில் தான் ஒரு சுவாரஸ்யமே உள்ளது.
எப்போது எடுக்கப்பட்ட படம் தெரியுமா?
செவ்வாய் கிரகத்தின், தென்மேற்கு மெலாஸ் சாஸ்மா (Melas Chasma) என்ற இடத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தான், இந்த இராட்சஸ டிராகன் போன்ற தோற்றம் காணப்பட்டுள்ளது. இந்த படம் முதன்முதலில் ஜூலை 4, 2007 அன்று, அதாவது சுமார் 13 வருடங்களுக்கு முன்பு 258 கி.மீ உயரத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சமீபத்தில் தான் இந்த புகைப்படத்தில் உள்ள டிராகனை ஆராய்ச்சி குழுவினர் எதற்ச்சையாக கண்டறிந்துள்ளனர்.
டிராகன் போலத் தெரியும் தோற்றம்
அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு எதற்ச்சையாக படத்தை தலைகீழாக மாற்றிப் பார்த்தபோது தான், அவர்களின் கண்களுக்கு இந்த டிராகன் புலப்பட்டுள்ளது. உண்மையிலேயே இதன் தோற்றம் பார்ப்பதற்கு டிராகன் போலத் தான் இருக்கிறது. அரிசோனா பல்கலைக் கழகத்தின் வலைப்பதிவு இடுகையின் படி, ஏன் மெலஸ் சாஸ்மாவில் இரண்டு நிறத்தில் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு இருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளது.
HiRISE படத்தின் உயர் தெளிவுத்திறன்
செவ்வாய்க் கிரகத்தின், மெலஸ் சாஸ்மாவின் தரையில் ஒரு இருண்ட மேட்ரிக்ஸில் ஒளி-நிறமான தொகுதிகள் கொண்ட ஒரு அசாதாரண தடுப்பு வைப்பு உள்ளது. HiRISE படத்தின் உயர் தெளிவுத்திறன் சில ஒளி-நிறத் தொகுதிகளில் சில மீட்டர் தடிமன் கொண்ட அடுக்குகளை வெளிப்படுத்துகிறது. தொகுதிகள் அளவு வேறுபடுகின்றன, ஆனால் பெரும்பாலானவை 100 முதல் 500 மீட்டர் வரை விட்டம் கொண்டவை.
வால்ஸ் மரினேரி பள்ளத்தாக்குமெ
லஸ் சாஸ்மாஸ் என்பது செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகையில் அமைந்துள்ள பிரமாண்டமான வால்ஸ் மரினேரி பள்ளத்தாக்கு அமைப்பின் ஒரு பகுதியாகும். நாசாவின் முந்தைய அறிக்கைகளின்படி, மெலஸ் சாஸ்மாஸின் இருப்பு நீர் மற்றும் காற்றின் செயலுக்கான சான்றாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல், இதன் உட்புறங்களில் காணப்படும் பல டெபாசிட் தடங்கல் முன்பு இருந்த நீர் மற்றும் காற்றுக்கான உருவாக்கத் தடமாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.நா
நாசா ஆராய்ச்சியாளர்கள் கூறியது என்ன?
நாசா ஆராய்ச்சியாளர்கள் படத்தில் உள்ள பள்ளத்தாக்குகளின் தொகுப்பையும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, பல ஒளி-நிற வைப்புக்கள் இந்த பள்ளத்தாக்குகளில் மட்டுமே காணப்படுகின்றன என்றும், இவை ஒருவேளை டெபாசிட் செய்யப்பட்டதாக இருக்கக்கூடும் என்றும், அல்லது அரிப்பு மூலம் வெளிப்பட்ட தடங்கலாக இது இருக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
செவ்வாயில் தெரியும் அழகான பல அமைப்புகள்
செவ்வாய் கிரகம் இதுபோன்ற பலவிதமான அழகான பல அமைப்புகளைக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை, செவ்வாய் கிரகத்தில் இதுவரை பேக்மேன், ஸ்டார் ஸ்ட்ரெக் ஸ்டார் ஃப்ளீட் இன்சிக்னியா போன்ற பல நம்பமுடியாத அமைப்புகளை நாசா கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவற்றில் எல்லாம் மிகச் சிறந்ததாக இந்த டிராகன் இருக்கும் என்பதில் நிச்சயமாக எந்த சந்தேகமுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக