Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

யூடியூப் வழியாக Netflix அறிவித்துள்ள அட்டகாச இலவச சேவை.!


எங்கள் டாக்குமெண்டரி பீச்சர் மற்றும் தொடர்கள்

Netflix நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது, அதன்படி இந்நிறுவனம் ஆசிரியர்களின் வேண்டுகோளின்படி நிறுவனத்தின் யூடியூப் சேனலில் Our Planet and Explained உள்ளிட்ட சில டாக்குமெண்டரி பீச்சர் மற்றும் சீரீஸ்களை இலவசமாக கிடைக்கச் செய்துள்ளதாக நெட்பிலிக்ஸ் தெரிவித்துள்ளது.

அதாவது கொரோனா வைரஸ் பரவல் கரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த லாக்டவுன் ஆனது கல்வி நிறுவனங்களை மூடுமாறு

கட்டாயப்படுத்தியதோடு மல்லியன் கணக்கான மானவர்களை தங்கள் வீடுகளில் அடைத்து வைத்தது.

குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வகுப்புகளை மெய்நிகர் கருவிகள் வழியாக இயங்க செய்கிறது,இந்நிலையில் யூடியூப்பில் சில உள்ளடக்கங்களை இலவசமாக்குவதற்கான நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு, அதன் மார்க்கெட்டிங் உத்திக்கான ஒரு அரிய விதிவிலக்காகும்.

 இந்த நெட்பிலிக்ஸ் நிறுவனம் எப்போதுமே அதன் சேவைகளை வழங்க மாதாந்திர சந்தா கட்டணத்தை வசூலிக்கும் பழக்கத்தினை கொண்டது. கோவிட்-19 லாக்டவுன் நாட்கள் அனைத்து இணைய பயன்பாட்டை வேறொரு இமய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இப்போது நெட்பிலிக்ஸ் அதன் பங்குகளை உயர்த்திய நிலையில், ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஆகியவற்றிலிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. இது இரண்டும் உலகளவில் 50மில்லியனுக்கும் அதிகமான கட்டண பயனர்களை ஈர்த்துள்ளது.

மேலும் ஆவணப்படங்களை அணுகுவதற்கான ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்தல் என்ற தலைப்பின் கீழ் பல ஆண்டுகளாக நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஆசிரியர்களை தங்கள் வகுப்பறைகளில் ஆவணப்படங்களை திரையிட அனுமதித்துள்ளது,ஆனாலும் பள்ளிகள் மூடப்பட்டதால் இது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

எனவேதான் அவர்களின் வேண்டுகோளின் பேரில் Netflix US YouTube சேனலில் எங்கள் டாக்குமெண்டரி பீச்சர் மற்றும் தொடர்கள் இலவசமாக அணுக கிடைக்கும்படி நாங்கள் செய்துள்ளோம் என்று நெட்பிலிக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக