இந்த திட்டத்துக்கு பல தொழிலதிபர்கள் தொடங்கி, பிரபலங்கள் வரை தங்களால் முடிந்த நன்கொடைகளைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதில் இந்தியாவின் மிகப் பெரிய பேமெண்ட் கம்பெனிகளில் ஒன்றான பேடிஎம் (Paytm) நிறுவனமும் பங்கு எடுத்து இருக்கிறது.
100 கோடி பேடிஎம் (Paytm) ப்ளாட்பார்மில், பிரதமரின் நன்கொடை திட்டத்துக்கு சுமாராக 100 கோடிக்கு மேல் நிதி திரண்டு கொண்டு இருப்பதாக, சமீபத்தில் சொல்லி இருக்கிறது.
பேடிஎம் (Paytm) நிறுவனம், பிதமரின் நன்கொடை திட்டத்துக்கு சுமார் 500 கோடி ரூபாயை கொடுக்க இருப்பதாக அறிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
10 ரூபாய் பேடிஎம் (Paytm) வழியாக (பேடிஎம் வேலட், டெபிட் கார்ட், யூ பி ஐ பணப் பரிவர்த்தனை) பிரதமரின் நன்கொடை திட்டத்துக்கு பணம் செலுத்தினால் 10 ரூபாய் வரை பேடிஎம் (Paytm) நிறுவனம் கூடுதலாகச் செலுத்தும் எனச் சொல்லி இருந்தது. இவை எல்லாம் போக இன்னொரு நல்ல காரியத்தை பேடிஎம் ஊழியர்கள் செய்து இருக்கிறார்கள்.
ஊழியர்கள் பேடிஎம் (Paytm) நிறுவனத்தில் சுமாராக 1,200 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்களாம். பிரதமரின் நன்கொடை திட்டத்துக்கு சுமாராக 15 நாட்கள் முதல் 3 மாதம் வரை தங்கள் சம்பளத்தை நன்கொடையாகக் கொடுத்து இருக்கிறார்களாம்.
இந்த நெருக்கடியான காலத்தில், அவர்கள் வேலை இருக்குமா? அடுத்த மாதம் அவர்களுக்கு சம்பளம் வருமா என்று கூட கவலைப்படாமல், பேடிஎம் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை கொடுக்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது.
பேடிஎம் தரப்பு 'இந்திய குடிமகன்கள் எல்லோருமே, இந்த கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒன்று சேர வேண்டும். தங்களால் முடிந்ததை நன்கொடையாக வழங்க வேண்டும். கொரோனாவுக்காக நாம் கொடுக்கும் ஒரு சிறிய நன்கொடை, நம்மை ஒரு வலுவான தேசமாக்க உதவும்' எனச் சொல்லி இருக்கிறார் பேடிஎம் நிறுவனத்தின் துணைத் தலைவர் அமித் வீர்.
பெரிய நன்கொடைகள் இந்த கொரோனாவுக்கு எதிரான போரில் டாடா ட்ரஸ்ட், டாடா சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் 1,500 கோடி ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். விப்ரோ, விப்ரோ எண்டர்பிரைசஸ், அசிம் ப்ரேம்ஜி ஃபவுண்டேஷன் அமைப்பு எல்லாம் சேர்ந்து சுமார் 1,125 கோடி ரூபாய் வழங்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
இப்படி கார்ப்பரேட்களும் தங்களால் முடிந்ததைச் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக