சியோமி நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி சீனாவில் அதன் Redmi AirDots S ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ரெட்மி ஏர்டோட்ஸ் எஸ் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.1,075 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது கருப்பு நிறத்தில் மட்டுமே வெளியாகியுள்ளது.
ரியல் டெக் ஆர்டிஎல் 8763 பிஎஃப்ஆர் சிப் கொண்ட ரெட்மி ஏர்டோட்ஸ் எஸ் ஆனது மற்ற சாதனங்களுடன் இணைக்க உதவும் ப்ளூடூத் 5.0 உடன் வருகிறது. நீங்கள் கேஸில் இருந்து அகற்றும்போது இது உடனடியாக உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைகிறது. மேலும் இவைகள் மோனோ மற்றும் பைனரல் மோட்களுக்கு இடையில் தடையற்ற ஸ்விட்சிங்கையும் வழங்குகின்றன.
சிறந்த ஆடியோ வெளியீட்டிற்காக இந்த இயர்போன்கள் 7.2 மிமீ டிரைவர்களுடன் வருகின்றன. இது ம்யூசிக் பைல்பேக்கிற்கான டச் கண்ட்ரோல்களைக் கொண்டுள்ளன, இது வால்யூமை கண்ட்ரோல் செய்யவும் மற்றும் டிராக்கை மாற்றவும் உதவுகிறது.
இந்த கண்ட்ரோல்கள் வாய்ஸ் அசிஸ்டென்ட்டை (சிரி, கூகிள் குரல் மற்றும் XiaoAI) தொடங்கவும் உங்களை அனுமதிக்கின்றன. மேலும், இந்த ஹெட்செட் கொண்டு அழைப்புகளை எடுக்கும்போது, இதில் டிஎஸ்பி நாய்ஸ்-கேன்சலிங் அம்சமும் கிடைக்கும்.
இந்த ஹெட்செட்டில் உள்ள 40 எம்ஏஎச் பேட்டரி ஆனது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ஸ் 4 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது, இதன் சார்ஜிங் கேஸ் ஆனது 300 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 12 மணிநேர பேக்கப்பை வழங்குகிறது.
தவிர, கேமிங் பிரியர்களை ஈர்க்கும் வண்ணம் இதில் புதிய லோ லேடன்சி கேம் மோட் உள்ளது. இதை ஏர் பாட்ஸில் உள்ள பட்டனை மூன்று முறை அழுத்துவதன் மூலம் ஆக்டிவேட் செய்யலாம்.
அளவீட்டில் இந்த ஹெட்போன்கள் 26.65 x 16.4 x 21.6 மிமீ உள்ளது. மறுகையில் உள்ள இதன் கேஸ் ஆனது 62 x 40 x 27.2 மிமீ உள்ளது. இதன் ஒவ்வொரு ஹெட்செட்டும் சுமார் 4.1 கிராம் எடையை கொண்டுள்ளது மற்றும் இதன் கேஸ் 35.4 கிராம் என்கிற அளவிலான எடையை கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக