தென் கொரியாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சோதனை kiosk-களை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில்., "ஒரு மருத்துவ சாவடி மற்றும் ஒரு மாதிரி எடக்கும் சாவடி என இரண்டு படி செயல்முறை இந்த பூத்தில் நடைபெறுகிறது. மாதிரிகளை வழங்குவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் தனி தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுவான அறிகுறிகள் அல்லது இன்ப்ளூயன்ஸா போன்ற நோயின் அறிகுறிகள் (ILI) உள்ளவர்கள், இங்கே ஆலோசனை படிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறி இருந்தால் அவர்கள் சோதனை சாவடிக்கு கொண்டுச் செல்லப்படுவர்" என குறிப்பிட்டுள்ளார்.
WISK என அழைக்கப்படும் இந்த வாக்-இன் மாதிரி கியோஸ்க் ஒரு தெளிவான, வெளிப்படையான மற்றும் மலட்டுச் சாவடி. உள்ளே இருக்கும் மருத்துவ பணியாளர்கள் கியோஸ்க்குடன் இணைக்கப்பட்ட கையுறைகளைப் பயன்படுத்தி சாவடிக்கு வெளியே அமர்ந்திருக்கும் நபர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சேகரிக்கலாம். ஒவ்வொரு நபரும் சோதிக்கப்பட்ட பிறகு, தனி நபர் உட்கார்ந்த அடம், சோதனை செய்த கையுறைகள் மற்றும் நாற்காலி கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.
Kiosk-களில் ஒரு மலட்டு மற்றும் சுத்தமான சூழலில் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்படுகின்றன. திருப்பூர் அரசு மருத்துவமனையின் டீன் முழு செயல்முறையையும் மேற்பார்வையிடுவார். விரைவான சோதனை கருவிகள் ஏப்ரல் 10-ஆம் தேதி வரும் என்றும், அதைத் தொடர்ந்து அவை பயன்படுத்தப்படும் என்றும் ஆட்சியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) உதவியுடன் மருத்துவ சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதேபோன்ற சோதனை Kiosk-க்கள் கேரளாவின் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் ‘வாக்-இன் மாதிரி கியோஸ்க்கள்’ எனப்படும் இரண்டு மாதிரி சேகரிப்பு Kiosk-க்கள் அமைக்கப்பட்டன. இந்த மாதிரி தென் கொரிய சேகரிப்பு மாதிரிகளிலிருந்து தழுவி உறுவாக்கப்பட்டது. மேலும் சுகாதாரப் பணியாளர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இது கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் முதன் முறையாக திருப்பூரில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைத்த ஆட்சியர் தற்போது தமிழகத்தின் முதல் WISK-னை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக