Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 19 மே, 2020

கொரோனாவுக்கு 10,000 நிதி அளித்த யாசகரின் மனிதாபிமானத்துக்கு குவியும் பாராட்டு!!

உலகமே கொரொனா தொற்றுநோயை எதிர்து போராடி வருகிறது. பல நாடுகள் அந்நாட்டு மக்களிடம், கொரொனாவுக்கு (Coronavirus) எதிரான போராட்டத்திற்கு நிதியுதவி தந்து உதவுமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. அதேபோல நமது நாட்டிலும் பிரதமர் இதே வேண்டுகோளை மக்களிடம் வைத்தார். PM Cares -க்கு தங்களால் முடிந்த அளவுக்கு நிதியுதவி செய்யுமாறு கூறியிருந்தார். இதனையடுத்து, நாட்டில் தொழில் அதிபர் தொடங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் வரை பலர் நிதியுதவி அளித்தனர்.

அதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரொனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, மக்கள் தங்கள் பங்களிப்பாக நிதி உதவி அளிக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை அடுத்து பொதுமக்கள் தொடங்கி பலர் தங்களால் முடிந்த நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோன்ற ஒரு சம்பவம் இன்று மதுரையில் நடந்துள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டி என்ற முதியவர் ஒருவர், தனது மாவட்டத்தை சுற்றி உள்ள பல மாவட்டங்களில் உள்ள புன்னிய ஸ்தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று வருகிறார். 

அந்தவகையில், இன்று மதுரை ஆட்சியரை சந்தித்து கொரொனா நிவாரண நிதியாக (Corona Relief Fund) பத்தாயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார். அவரின் மனிதாபிமானத்தை பார்த்து பலர் பாராட்டி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!