சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.
சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போன்
சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் குர்னு10 யுஆழுடுநுனு டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2340x1080 பிக்சல் திர்மானம்,19:5:9 என்ற திரைவிகிதம், எச்டிஆர்10 பிளஸ், ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதி மற்றும் அட்ரினோ 650ஜிபியு ஆதரவு உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி மி 10 5ஜி
சியோமி மி 10 5ஜி சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.
சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போனில் 108எம்பி
சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போனில் 108எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, ஏஐ தொழில்நுட்பம்,எல்இடி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இதில் இடம்பெற்றுள்ளது.
4780எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 4780எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளம் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.
ப்ளூடூத் 5.1 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை
பின்பு யு.எஸ்.பி. டைப்-சி, 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 10 5ஜி மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
கோரல் கிரீன் மற்றும் டுவிலைட் கிரே நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.
வரும் மே 18-ம் தேதி முதல் இந்த சாதனத்தின் விற்பனை துவங்கும்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது, பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999-ஆக உள்ளது.மேலும் வரும் மே 18-ம் தேதி முதல் இந்த சாதனத்தின் விற்பனை துவங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக