அதை விட அப்படி என்னதான் கடிதம் மூலம் தெரிவித்திருப்பார் கிம் என்ற கேள்வியும் எழுகிறது வட கொரியாவைப் பொறுத்தவரை அந்த நாடு நம்பும் ஒரே நண்பன் சீனாதான். இதனால்தான் இந்தக் கடிதம் எதிர்பார்ப்பைக் கிளறி விட்டு விட்டது.
ஆனால் தனது கடிதத்தில் சீன அதிபரைப் பாராட்டியுள்ளாராம் கிம் ஜாங் உன். அதாவது கொரோனாவைரஸ் தாக்கம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், அதை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபரைப் பாராட்டியுள்ளாராம் கிம் ஜாங் உன். சீனாவின் பேருதவிதான் வட கொரியாவை உயிர்ப்புடன் வைத்துள்ளது. எனவே சீனாவுக்கு ஒரு பாதிப்பு என்றால் அது வட கொரியாவுக்கும் சேர்த்துதான் என்பதால் கொரோனா குறித்து வட கொரியாவும் கவலைப்பட்டது.
ஆனால் சீனா இந்த சவாலை முறியடித்து கொரோனாவை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், பொருளாதாரமும் சரியாமல் பார்த்துக் கொண்டதால் கிம்முக்கு நிம்மதியாகி விட்டதாம். உடனேதான் குஷியில் கடிதம் எழுதி போஸ்ட் செய்து விட்டார் இந்த மர்ம மனிதர்! பல காலமாகே சீனாவை நம்பியிருக்கிறது வட கொரியா. பொருளாதார ரீதியில் உலக நாடுகள் வட கொரியாவை முடக்கினாலும் கூட சீனா கை கொடுத்தும், காசு கொடுத்தும் உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக