ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், டீலர்ஷிப் நிறுவனங்களை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் பலர் புதிய வாகனம் வாங்குவதற்காக செலுத்தப்பட்ட முன்பணத்தை திரும்ப பெற்று வருவது தெரியவந்துள்ளது.
வாகன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்வாகன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது. பல்வேறு தொழில் வர்த்தகங்கள் நடைபெறாமல் நாட்டின் பொருளாதார நிலை திண்டாட்டம் கண்டு வருகிறது.
வைரஸ் பாதிப்பு தீவிரம் குறைந்த பகுதிகளில் ஊரடங்கு விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. ஆட்டோத்துறை சார்ந்த நிறுவனங்களும் தங்களுடைய இயக்க பணிகளை துவங்கியுள்ளன.
பல்வேறு வாகன நிறுவனங்கள் தங்களுடைய புதிய ரக வாகனங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வழிமுறைகளை அறிமுகம் செய்தன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தால், புதிய வாகனங்களை வாங்குவதற்காக செலுத்தப்பட்ட முன்பணத்தை வாடிக்கையாளர்கள் திரும்ப பெறுவதற்கு முயற்சித்து வருகிறார்களாம்.
ஊரடங்கு காரணமாக தினசரி வாழ்க்கை முடங்கியுள்ள சூழ்நிலையில், பணி நிரந்தம் குறித்த கவலை எழுந்துள்ளது. இதனால் பல்வேறு வகைகளில் முதலீடு செய்துள்ள பணத்தை மக்கள் திரும்ப பெறு ஆர்வம் காட்டி வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் நாடு முழுவதும் உள்ள மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார்ஸ், மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற நிறுவனங்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீலர்ஷிப்புகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன.
இதனால் வாகனங்களுக்கான விலையை உயர்த்துவதற்கு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மேலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்களிடையே சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என்பதால், தனிநபர் வாகன போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக, புதிய வாகனங்களை செலுத்தப்பட்ட முன்பணத்தை வாடிக்கையாளர்கள் திரும்ப கேட்பது நிறுவனங்களை பீதி அடையச் செய்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும். அதனால் வாகன டீலர்ஷிப் நிறுவனங்கள் மேலும் ஒரு மாதத்திற்கு மூடி கிடக்கும்.
இதனால் புக் செய்யப்பட்ட வாகனங்களை வாங்க முடியாத சூழல் ஏற்படும் என மக்கள் தேவையற்ற கவலையில் உள்ளனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வரும் நிலையி, மக்களின் கவலை தேவையற்றது என்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த பொதுமுடக்கம் மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, வைரஸ் பாதிப்பு குறைவாகவுள்ள பகுதிகளில் ஆட்டோமொபைல் துறை சார்ந்த பணிகள் துவங்கியுள்ளன.
ஊரக பகுதிகளில் இருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஆலைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. எனினும், அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
தொழிற்சாலைகளுக்கு வந்து பணியாற்ற வேண்டிய அவசியமில்லாத ஊழியர்கள், வீட்டில் இருந்தே பணி செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோத்துறை சார்ந்த நடவடிக்கைகளில் சமூக இடைவெளி என்பது முறையாக பின்பற்றப்பட்டு வருவதாக நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
எதிர்காலத்தில் வரக்கூடிய சவால் மிகுந்த நாட்களை சமாளிக்கும் வகையில், பல்வேறு வகையில் முதலீடு செய்துள்ள பணத்தை மக்கள் திரும்பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை விரைவில் மாறும் என எதிர்பார்ப்போம்.
ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக