Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 மே, 2020

சாமி குளிக்கிறதை காட்றாங்க, டிரஸ் மாத்துறதை மட்டும் ஏன்..: சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதியின் வீடியோ




நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறிவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பு செய்தி பரவிய நிலையில் அதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்தார் விஜய் சேதுபதி. போய் வேற இருந்தா பாருங்கடா என அவர் கூறியிருந்தார்.


அப்போது இருந்து விஜய் சேதுபதி பற்றி தொடர்ந்து பல சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் ஜோதிகா ஹிந்து கோவில்கள் பற்றி பேசியது சர்ச்சையான நிலையில் அதற்கு விஜய் சேதுபதி ஓப்பனாக ஆதரவு கொடுப்பது போல ஒரு ட்விட் வைரலானது. ஆனால் அது போலியானது என பின்னர் விளக்கம் கொடுத்தார் விஜய் சேதுபதி. அதன் பின்னர் சூர்யா ஜோதிகாவுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையை விஜய் சேதுபதி 'சிறப்பு' என கூறி பாராட்டினார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி டிவி நிகழ்ச்சி ஒன்றில் கடவுள்கள் பற்றி பேசியிருப்பது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

விஜய் சேதுபதி பேசியிருப்பது இதுதான்..

”சாமிக்கு அபிசேகம் செய்யும் போது பக்தர்களுக்கு காட்டுவார்கள். முடித்தபிறகு துணி போட்டு மூடிவிடுவார்கள். என்ன தாத்தா துணி போட்டு மூடிவிட்டார்கள் என குழந்தை கேட்டதற்கு, ‘சாமி இவ்ளோ நேரம் குளித்துக்கொண்டிருந்தது. இப்போ டிரஸ் மாத்த போவுது அதான் மூடிட்டாங்க’ என தாத்தா கூறுகிறார். ‘என்ன தாத்தா குளிக்கிறதையே காமிச்சாங்க. ஆனா டிரெஸ் மாத்துரதை மட்டும் ஏன் மூடிட்டாங்க’ என குழந்தை கேட்கிறது..” என விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

இதற்கு சிலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக