கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியில் வர முடியாததால் மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள், திரைப்படங்கள் என வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
மேலும் பிரபலங்கள் பலரும் டிக்டாக் வீடியோக்கள் அதிகம் வெளியிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேேிட் வார்னர் சூப்பர்ஹிட் தெலுங்கு பாடலான புட்ட பொம்மா பட பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
அது அதிக அளவில் வைரலான நிலையில் தற்போது அவர் தேவர் மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடலின் bgmக்கு டிக் டாக் செய்துள்ளார்.
டேவிட் வார்னரின் மனைவி மற்றும் குழந்தைகளும் அந்த வீடியோவில் உள்ளனர். இது ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக தமிழர்கள் பலரும் இதை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக