அஸ்ஸாம் மாநிலம் காம்ருப் மாவட்டத்தில் உள்ள ஜல்ஜலி ஆற்றின் குறுக்கே அரசின் உதவி ஏதுவுமின்றி ரூ. ஒரு கோடி செலவில் கிராம மக்களே கட்டைகளாலான பாலம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
காம்ரூப் மாவட்டிற்கு உட்பட்ட 10 கிராம மக்கள் மழைக் காலங்களில் ஆற்றைக் கடப்பதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது, உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வது, மருத்துவமனைக்குச் செல்வது என அனைத்திற்குமே சிரமமாக இருந்துள்ளது.
இதன் காரணமாகச் சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தனர். அதன்படி 2018 ஆம் ஆண்டு ஜல்ஜலி ஆற்றின் குறுக்கே 335 மீட்டருக்கு கட்டைகளால் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
10 கிராமங்களைச் சேர்ந்த 7 ஆயிரம் பேர் இந்த பாலத்தைக் கட்ட பணம் அளித்துள்ளனர். 2 ஆண்டுகளாக பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது பாலம் கட்டும் பணி முடிவடைந்தது.
இந்நிலையில் இப்போது அப்பகுதி மக்கள் கான்கிரீட் பாலம் கட்டித்தரச் சொல்லி அரசுக்குக் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். தங்கள் பிரச்சினைகளுக்கு வழி கேட்டு நின்ற இடத்தில் அரசு உதவி புரியவில்லை என மக்களே ஒன்றிணைந்து பாலத்தைக் கட்டிய சம்பவம் அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக