சார்லிஸ் தெரோனின் 'The Old Guard' ஜூலை 10-ஆம் தேதி Netflix-ல் வெளியிடப்பட உள்ளது!
ஹாலிவுட் நட்சத்திரம் சார்லிஸ் தெரோனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Netflix திட்டமான "The Old Guard" ஜூலை 10-ஆம் தேதி முதன்முறையாக திரையிடப்பட உள்ளது.
44 வயதான நடிகர் தனது ட்விட்டர் பக்கதின் வாயிலாக இந்த செய்தியினை தனது ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். மேலும் படத்தின் நான்கு ஸ்டில்களையும் அவர் பதிவோடு பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவிற்கு அவர் "@oldguardmovie @netflix ஜூலை 10," என்று தலைப்பிட்டு, படத்தின் வெளியீடு குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.
ஜினா பிரின்ஸ்-பைத்வுட் எழுதி இயக்கியுள்ள இப்படம் கிரெக் ருக்கா மற்றும் இல்லஸ்ட்ரேட்டரின் அதே பெயரின் காமிக் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது.
பல நூற்றாண்டுகளாக கூலிப்படையினராக பணியாற்றி வரும் ஆண்டி என்ற பெண் தலைமையிலான சாகா வரம் பெற்ற படையினரின் கதை இது என கூறப்படுகிறது. மற்றும் ஒரு தீய குழுவில் இக்குழுவின் சாகாவரம் தன்மைக்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதை சாகா வரம் பெற்ற மற்றொரு பெண்ணின் உதவியோடு இக்குழு அறியும் போது பெரும் அதிர்ச்சியடைகிறது. தங்கள் சாகா வரத்திற்கான காரணத்தை காப்பாற்றுவதும், புதிய பெண்ணை அடையாளம் காண்பதும் படத்தின் முழு கதையை நீட்டிகிறது.
தெரோன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டென்வர் மற்றும் டெலிலா மூலமாகவும், ஸ்கைடான்ஸின் டேவிட் எலிசன், டானா கோல்ட்பர்க் மற்றும் டான் கிரெஞ்சர் ஆகியோரின் உதவியுடனும் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக