Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 மே, 2020

தமிழில் ஹிட் அடித்த "ஓ மை கடவுளே" மூன்று மொழிகளில் வெளியாகிறது...!

அஸ்வத் மாரிமுத்து இயக்கி அசோக் செல்வன் நடித்துள்ள "ஓ மை கடவுளே" படம் திரைக்கு வந்து ஹிட் அடித்துள்ளது. ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ள இப்படத்தில் வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் அசோக் செல்வன் - ரித்திகா சிங் பின்னர் திருமணம் செய்துகொள்ளும் போது அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதே இப்படத்தின் கசையம்சம். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரித்துள்ள இப்படம் காதலர் தினத்தின் ஸ்பெஷலாக கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியானது. பிரண்ட்ஷிப், காதல் கல்யாணம் , காமெடி என அத்தனை அம்சங்களும் கலந்திருந்த இப்படத்தை இளைஞர்கள் கொண்டாடினர்.

கோலிவுட்டில் மெகா ஹிட் அடித்த இந்த திரைப்படத்தை தற்போது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மூன்று மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இந்த படங்களில் யார் நடிப்பார்கள் என இப்போதே யூகிக்க துவங்கிவிட்டனர். அசோக் செல்வன் மற்ற மொழிகளில் ஹீரோவாக நடிப்பது கொஞ்சம் டவுட் தான் என்றாலும் படத்தின் ஹீரோயினாக நிச்சயம் ரித்திகா சிங் எல்லா மொழிகளிலும் நடிப்பார் என கூறிவருகின்றனர். வரட்டும் அதிகாரபூர்வ அறிவிப்பு பொறுத்திருந்து பாப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக