ரமலான் நாட்களில் நோன்பிருப்பதால், கீழ்கண்ட நன்மைகள் எல்லாம் கிடைக்கிறது.
ரமலான் பண்டிகை என்பது இஸ்லாமியர்களால் கொண்டாடப்படக் கூடிய சிறப்பு பண்டிகையாகும். இந்த மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிப்பது வழக்கம். இஸ்லாமியர்கள் இந்த நோன்பை, முகமது நபி முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக அனுசரிக்கின்றனர்.
இஸ்லாமியர்கள், விடியற்காலையிலிருந்து சூரிய மறைவு வரை உண்ணாநோன்பு கடைபிடிக்கின்றனர். இந்த நோன்பு நாட்களில், முஸ்லிம்கள் உணவு உட்கொள்ளல், நீர் மற்றும் திரவங்களை அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் பாலியல் உறவுகளில் ஈடுபடுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கின்றனர்.
இஸ்லாமியர்கள், நோன்பு தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்படும் உணவை ஸஹர் என்றும், நோன்பு முடிந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் உணவை இப்தார் என்றும் அழைக்கின்றனர். இந்த நோன்பு நாட்களில், தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல் போன்ற நல்ல பண்புகளை கடைபிடித்து வருகின்றனர். இதனால், தொடர்ந்து இந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு, இந்த நோன்பு இவர்களுக்கு உதவி புரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக