மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் புத்ய ஏஎம்ஜி சி 63 கூபே காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனுடைய விலை, வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த விபரங்களை விரிவாக பார்க்கலாம்.
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி
சி 63 கூபே கார் ரூ. 1.33 கோடி (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) ஆரம்ப விலையில் விற்பனைக்கு
அறிமுகம் செய்துள்ளது. சி-கிளாஸ் மாடலில் உயர்ரக மாடலாக இந்த கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த காரில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், காரினுடைய வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்பிலும் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏஎம்ஜி சி 63 கூபே மாடலில் பானா அமெரிக்கானா கிரில் உள்ளது. மேலும் இந்த காரினுடைய முன்பக்கத்தில் எல்.இ.டி முகப்பு விளக்குகள், இன்டகிரேடட் செய்யப்பட்ட எல்.இ.டி பகல்நேர விளக்குகள், முன்பக்க பம்பர், பெரியளவிலான ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பெரியளவிலான முன்பக்க பானட், கூர்மையான மற்றும் வலிமையான தோற்றம் கொண்ட முன்பக்க வடிவமைப்பு, 18 அங்குலத்தில் அலாய் சக்கரங்கள், எல்.இ.டி டெயில் விளக்குகள், புதிய புகைப்போக்கி குழாய் போன்ற பல்வேறு புதுமையான கட்டமைப்புகள் இந்த காரில் உள்ளன.
டிஜிட்டல் தரத்திலான டாஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்துக்கான திரை, பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் சக்கரம், ரேஸ்-டைஸ் பக்கட் இருக்கைகள், உயர்ரக லெதரால் செய்யப்பட்ட வேலைபாடுகள், கார்பன்-ஃபையருடன் கூடிய மத்திய கன்சோல் பகுதி என காரினுடைய உட்புறத்திலும் பல்வேறு புதிய அம்சங்களை காண முடிகிறது.
புதிய மெர்டிசிஸ்-ஏஎம்ஜி சி 63 கூபே மாடலில் ஸ்ளிப்பரி, கம்போர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட்+, ரேஸ் மற்றும் இன்டுவிட்ஜுவல் ஆகிய 6 டிரைவிங் மோடுகள் உள்ளன. மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி 63 கூபே மாடலில் 4.0 லிட்டர் பை-டர்போ வி8 எஞ்சின் உள்ளது.
பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட இந்த எஞ்சின் 469 பிஎச்பி பவர் மற்றும் 650 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும். மேலும் இந்த எஞ்சின் 9 ஸ்பீடு ஜி-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 4 விநாடிகளில் எட்டிப்பிடித்து விடக்கூடிய இந்த கார், அதிகப்பட்சமாக 250 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த காருடன் ஏஎம்ஜி ஜிடி-ஆர் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு கார்களுடைய அறிமுக நிகழ்வும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெர்ச்சுவல் டிஜிட்டல் நிகழ்ச்சி மூலம் இணைந்து நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் கார்களில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சி 63 கூபே சி-கிளாஸ் செடான் காராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த காருக்கு பிஎம்டபுள்யூ எம்3 மாடல் சரிநிகர் போட்டியாக அமையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக