வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசின் அறிவிப்புகள் அறிவிப்புகளாகவே இருக்கும் நிலையில், மக்கள் நடந்து செல்வது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இந்நிலையில், தன் சொந்த மாநிலத்துக்கு நடந்தே சென்ற நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு நடுரோட்டில் பிரசவம் நடைபெற்றுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் கூறிய செய்தி மேலும் மேலும் வருத்தத்தை அதிகரிப்பதாக உள்ளது. அவர் தெரிவித்ததாவது, “அவளுக்கு நடுவழியிலேயே பிரசவம் நடைபெற்று விட்டது. அதன்பிறகு நாங்கள் இரண்டு மணி நேரம் ஓய்வெடுத்தோம். பின்னர், அங்கிருந்து இன்னும் 150 கி.மீ தூரம் மீண்டும் நடந்து வந்தோம்” என்று தெரிவித்தார்.
அதன்பிறகு, உன்ச்செகாராவின் எல்லையை அவர்கள் அடைந்தபோது, மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஏ.என்.ஐ.செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
நடந்தே ஊருக்குச் சென்ற பெண்ணுக்கு நடுவழியில் பிரசவமானதும், பிரசவத்துக்குப் பிறகும் ஏறக்குறைய அந்தப்பெண் 150 கி.மீ மேலும் நடந்ததுமான சம்பவத்தைத் தொடர்ந்து, அடிப்படை நிலை வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீதும் கவனம் செலுத்துகிறதா என்று கேள்விகள் எழும்பி வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக