Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மே, 2020

1 ரூபாய்க்கு தரமான மாஸ்க்... கலக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம்

https://images-na.ssl-images-amazon.com/images/I/61FwB8EDHiL._SL1500_.jpg



நாடு முழுக்க அமலில் இருக்கும் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசையப் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன முகக்கவசமும், கிருமிநாசினியும். இனிவரப்போகும் காலம் முழுக்க மக்கள் மாஸ்க்கோடுதான் வாழவேண்டிய நிலைமை வரும் என்று ஆய்வாளர்களும், மருந்தியலாளர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,
1 ரூபாய்க்கு மாஸ்க் விற்பனையைத் தொடங்கியுள்ளது திருப்பூர் மாவட்ட நிர்வாகம்.

கொரோனா வைரஸ் தொற்றால் சமூக வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலாவதாக நாடு முழுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அடிப்படை ஊழியர் முதல் அரசாங்க
ஊழியர் வரை அனைவருக்கும் தேவையான பொருளாக மாஸ்க் மாறியுள்ளது.

ஆனால், தேவையைக் குறிவைத்துக் காசுபார்க்க நினைக்கும் வியாபாரிகளால் பல இடங்களில் மாஸ்க்கின் விலையும் அதிகரித்து விட்டது. இதனால், ஏழை எளிய அடித்தட்டு மக்கள் மாஸ்க் வாங்குவதைத் தவிர்த்து கைக்குட்டை, ரிப்பன் உள்ளிட்ட இன்னபிற துணிகளைக் கொண்டு முகக்கவசம் போலப் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டில் இருக்கும் மாஸ்க் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இதனை மத்திய அரசும் ஊக்குவித்து வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான போர்: பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!!

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட மாநகராட்சி அலுவலகத்தின் வாயிலில் வைக்கப்பட்டுள்ளது தானியங்கி மாஸ்க் வழங்கும் எந்திரம். வெறும் 1 ரூபாய்க்கு தரமான மூன்று லேயர்கள் கொண்ட மாஸ்க்கை வழங்குகிறது இந்த எந்திரம். மாநகராட்சி ஊழியர்கள் உட்பட அலுவலகத்துக்கு வரும் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதால் நுழைவாயிலிலேயே வைக்கப்பட்டுள்ளது இந்த எந்திரம்.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன், “தனது மாநகாராட்சிக் குழுவுக்கு பாராட்டுகளை”தெரிவித்துள்ளார்.

அதேசமயம், இந்த எந்திரம் வேலை செய்யவில்லை என்று அதே சுட்டுரைக்குக் (ட்வீட்) கீழ் புகார் தெரிவித்த நபருக்கு, “தான் அதை கவனிப்பதாகவும்” பதிலளித்துள்ளார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்.
 
samayam tamil


மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த மாஸ்க் எந்திரம் வைக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக