நெல்லை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்தவருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்
அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று வந்த ஒருவருக்கு கொரோனா
நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரப்ப
ணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா நோய்த் தொற்றானது வேகமாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 93 பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று சிலர் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைகுறிச்சி பகுதியில் 54 வயது நபருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு வந்து சென்ற போது நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோய் தடுப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரின் குடும்பத்தினர் மூன்றுபேரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பணியாளர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக