Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 மே, 2020

சரியான நேரத்தில் தரமான அன்லிமிடெட் ஆபரை அறிவித்துள்ள BSNL!

BSNL Unlimited Call Offer

மீண்டும் லாக்டவுன் நீடிக்கப்படவுள்ள நிலைப்பாட்டில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களை திருத்தம் செய்துள்ளது. என்ன திருத்தம்?

பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனமானது அன்லிமிடெட குரல் அழைப்புகளை வழங்கும்படி தனது ப்ரீபெய்ட் திட்டங்களை திருத்தி உள்ளது.

மேலும் எம்என்டிஎல் என்று அறியப்படும் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் நெட்வொர்க்குக்கு எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குவதாகவும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் சென்னை பிரிவு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, நிறுவனம் மொத்தம் 25 ப்ரீபெய்ட் திட்டங்கள், ப்ரீபெய்ட் வவுச்சர்கள் மற்றும் பர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பன்களில் அன்லிமிடெட குரல் அழைப்பு சலுகைகளை வழங்குகிறது.

இந்த திருத்தத்தின் கீழ், மும்பை மற்றும் டெல்லியின் எம்.டி.என்.எல் நெட்வொர்க் ரோமிங் உட்பட இலவச ஹோம் மற்றும் தேசிய ரோமிங் அழைப்பு நாமக்கல் கிடைக்கும். எஸ்.டி.வி 99, எஸ்.டி.வி 104, எஸ்.டி.வி 349 மற்றும் எஸ்.டி.வி 447 ஆகியவை ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் எஃப்யூபி அழைப்பு வரம்பை வழங்கும் என்றும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ரூ.97, ரூ.118, ரூ.187, ரூ.199, ரூ.247, ரூ.298, ரூ.349, ரூ.399, ரூ.447, ரூ.499, மற்றும் ரூ.1,098 போன்ற ப்ரீபெய்ட் திட்டங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எம்டிஎன்எல் ரோமிங்கில் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை ரூ.106, ரூ.107, ரூ.153, ரூ.186, ரூ.365, ரூ.429, ரூ.485, ரூ.666, ரூ.997, ரூ.1,699 மற்றும் ரூ.1,999 போன்ற PVக்கள் மற்றும் FRVக்களுக்கும் பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதன் தமிழ்நாடு வட்டத்தில் 96 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியைக் குறைத்தது. ரூ.96 மதிப்புள்ள ப்ரீபெய்ட் வவுச்சர் வசந்தம் கோல்ட் பிளான் அல்லது பிவி 96 என அழைக்கப்படும் இந்த திட்டம் இப்போது 60 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

முன்னதாக இந்த திட்டம் 90 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கியது. அதாவது வசந்தம் கோல்ட் பி.வி 96 திட்டத்தின் செல்லுபடியை இந்த டெலிகாம் நிறுவனம் 30 நாட்கள் குறைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக