இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக பி. வாசு கூறியிருந்தார். கதாநாயகனாக அந்த படத்தில் முன்னணி ஹீரோ ராகவா லாரன்ஸ் தான் நடிக்கவுள்ளார். மேலும் லாரன்ஸிற்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்திற்காக கிடைத்த அட்வான்ஸ் பணத்தை தான் லாரன்ஸ் கொரோனா தடுப்பு நிதியாக அனைவருக்கும் வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் பி. வாசு சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸின் கதாபாத்திரத்தை கூறியுள்ளார்.
ஆம், இயக்குநர் பி. வாசு சமீபத்தில் பிரபல தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், சந்திரமுகி 2 முதல் பாகத்தில் வந்த கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டது. அதில் வேட்டையனாக நடித்த ரஜினி மற்றும் ஜோதிகாவிற்கு இடையில் என்ன நடந்தது, அவர்கள் ஏன் பகைவர்கள் ஆனார்கள் என்பதன் பின்னணியை கூறுவதாக சந்திரமுகி திரைப்படம் இருந்தது. உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் வேட்டையனாக லாரன்ஸ் நடிப்பதாகவும், அந்த அரண்மனை பங்களாவில் வந்து தங்கும் புதிய குடும்பத்தை வேட்டையன் மற்றும் சந்திரமுகி என்னென்ன செய்கிறார்கள் என்பது தான் கதை என்று உண்மையை போட்டுடைத்துள்ளார். மேலும் முதல் பகுதியில் ரஜினிக்கு ஏற்றவாறு கதையை எவ்வாறு எழுதப்பட்டதோ, அதை போன்று ராகவா லாரன்ஸ் தன் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் அளவிற்கு சந்திரமுகி 2 எழுதியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் பிற நட்சத்திரங்களை குறித்த தகவல் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக