மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவை தேர்தல் மே 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல்வர் உத்தவ் தாக்கரே பதிவியேற்று, வரும் 28ம் தேதி உடன் 6 மாதம் காலம் நிறைவடைய உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்பித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவால் முதல்வர் பதிவியை இழக்க இருந்த நிலையில், மே 27 ஆம் தேதிக்கு முன்னர் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருக்க வேண்டியது அவசியம் என ஆணையம் கூறிருந்தது. முதல்வர் பதவி ஏற்ற உத்தவ் தாக்கரே எம்எல்ஏ மற்றும் எம்பியாக இல்லாததால் மே 27 க்குள் அவர் சட்ட மேலவைக்கு தேர்தெடுக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவை தேர்தல் மே 21 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. முதல்வராக உள்ள உத்தவ் தாக்கரே தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள மேலவை தேர்தல் நடக்கிறது என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த பிரதமர் மோடியை தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்திருந்தார் உத்தவ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக