ஜூம் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக தகவல்வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் டீம்ஸ் சேவையின் க்ருப் கால் அம்சத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை 250 ஆக உயர்த்தப்பட இருக்கிறது,தற்சமயம் இந்த சேவையில் அதிகபட்சம் 100பேருடன் உரையாட முடியும். இந்த புதிய எண்ணிக்கை வரும் வாரங்களில் அதிகப்படுத்தப்பட இருக்கிறது.
குறிப்பாக கூகுள் மீட் மற்றும் ஜூம் உள்ளிட்ட சேவைகளுடனான போட்டியை எதிர்கொள்ள மைக்ரோசாப்ட் டீம்ஸ் முடிவு செய்துள்ளது,இது சேவைகளிலும் தற்சமயம் ஒரே சமயத்தில் 100பேருடன் க்ரூப் கால் பேசும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
அன்மையில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதௌ்ளா மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சேவையை உலகம் முழுக்க சுமார் 7.5கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
இந்த மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைக்கான ரோட்மேப் பகுதியில் அந்நிறுவனம் க்ரூப் கால் எண்ணிக்கையை 250ஆக உயர்த்த இருப்பதை தெரிவித்து இருக்கிறது. பின்பு சந்தா செலுத்தி டீம்ஸ் சேவையை பயன்படுத்தும் அனைவருக்கும் விரைவில் இந்த அம்சம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீம்ஸ் சேவையை பயன்படுத்துவோர் தற்போது அதிகபட்சமாக 20பேருடன் க்ரூப் கால் பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் க்ரூப் கால் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமின்றி மீட்டிங்களை ஷெட்யூல் செய்வது, மீட்டிங் ரெக்கார்டிங், போன் கால், ஆடியோ கான்பரன்சிங்
உள்ளிட்ட வசதிகள் சந்தா செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக