Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 மே, 2020

அட்டகாசமான ₹.251 ப்ரீபெய்ட் தரவு திட்டதை அறிவித்த ஏர்டெல்..!

ஏர்டெல் ரூ. 251 ப்ரீபெய்ட் தரவு திட்டதை அறிவித்துள்ளது... அதன் நன்மைகள் மற்றும் வெல்டிட்டி பற்றி காணலாம்... 
பாரதி ஏர்டெல் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய டேட்டா வவுச்சர் ரீசார்ஜ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் நாட்டில் ரூ.98 ப்ரீபெய்டு டேட்டா வவுச்சரையும் திருத்தியமித்துள்ளது.

ரூ.251 டேட்டா வவுச்சருடன் தொடங்கலாம். இந்த திட்டத்தில் பயனர்கள் இப்போது 50 GB டேட்டாவைப் பெறுவார்கள். டேட்டா வவுச்சர் அதற்கென செல்லுபடியாக்கலுடன் வரவில்லை. இதன் பொருள் இந்த பேக் தற்போதைய ப்ரீபெய்டு திட்டத்துடன் ஒரு கூடுதல் பேக் ஆகும். மேலும், அடிப்படை திட்டத்தில் வேலிடிட்டியை இதுவும் கொண்டிருக்கும். மேலும், நிறுவனம் ரூ.98 பேக்கை மீண்டும் திருத்தியுள்ளது. ப்ரீபெய்டு திட்டம் இப்போது 12 GB டேட்டாவுடன் வருகிறது. 

பேக் முன்பு 6 GB டேட்டாவை வழங்கியது. ஆட்-ஆன் பேக் இப்போது சொந்த வேலிடிட்டி இல்லாமல் வருகிறது, அதாவது இந்த பேக் அடிப்படை திட்டத்தின் தற்போதைய வேலிடிட்டியைப் பொறுத்தது.இதற்கிடையில், ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் தனது ப்ரீபெய்டு பயனர்களுக்காக ரூ.2498 என்ற புதிய வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும். புதிய ரூ.2498 ப்ரீபெய்டு திட்டம் இப்போது ஏர்டெல் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2 GB தரவை வழங்குகிறது. கூடுதலாக, இந்த திட்டம் இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற, உள்ளூர் மற்றும் SDT அழைப்பையும் வழங்குகிறது.
ZEE5 பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான இலவச சந்தா மற்ற நன்மைகளில் அடங்கும். இது தவிர, ஏர்டெல் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளுக்கு ஆன்டிவைரஸ் பாதுகாப்பு, இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஷா அகாடமியிலிருந்து 28 நாட்கள் மதிப்புள்ள இலவச வகுப்புகள் போன்ற கூடுதல் நன்மைகளைப் பெறுவார்கள். ஃபாஸ்டேக்கில் ரூ.150 கேஷ்பேக் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக