Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 மே, 2020

பொது ஊரடங்கு விவகாரம்..! வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 2 ஜிபியை அளித்துள்ள ஜியோ நிறுவனம்..!

ஜியோ நிறுவனம்  2 ஜிபி டேட்டாவை தினமும் வழங்கி வருகிறது. இந்த சேவை  இலவச டேட்டா ஜியோ டேட்டா பேக் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த சூழலில் உலகம் முழுவது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பலர் வீட்டில் இருந்தபடியே தாங்கள் தங்கள் அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளது.  இதனை  கருத்தில் கொண்டு இந்திய தொலை தொடர்பு தனியார் நிறுவனமான  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவினை கடந்த மாதம் இலவசமாக வழங்கியது.
இதே போல தற்போது  ஜியோ நிறுவனமும்  2 ஜிபி டேட்டாவை தினமும் வழங்கி வருகிறது. இந்த சேவை  இலவச டேட்டா ஜியோ டேட்டா பேக் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் இலவச 2 ஜிபி டேட்டா சேவை நான்கு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். இவை ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் பயனர்களின் கணக்குகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.  இந்த  ஜியோ இலவச டேட்டா சலுகையை பெற மை ஜியோ செயலியில் மை பிளான்ஸ் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இலவச டேட்டா வழங்கப்படும் தேதி ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வேறுபடும். இலவச டேட்டா பயனரின் பழைய டேட்டா பேக் சலுகையின் மேல் வழங்கப்படுகிறது. அதாவது பயனர் ஏற்கனவே தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் சலுகையை தேர்வு செய்திருந்தால், அவருக்கு மொத்தம் 3.5 ஜிபி டேட்டா நாள் ஒன்றுக்கு வழங்கப்படும். ஜியோ தவிர வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட சலுகைகளில் இருமடங்கு டேட்டாவை  வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக