Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 29 மே, 2020

மீண்டும் டிக்டாக் செயலீக்கு ஆதரவு தெரிவிக்த கூகிள்.. 8 மில்லியன் எதிர்மறை விமர்சனங்களை நீக்கியுது!

கூகுள் நிறுவனம், டிக்டாக் செயலிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மேலும் 6 மில்லியன் எதிர்மறை விமர்சனங்களை நீக்கியுள்ளது.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக வைரலாகி வரும் ஒரே ஹாஷ்டேக் #Bantiktok, #Tiktokdown, #BanTikTokinIndia. இதுபோல டிக்டாக் செயலிக்கு எதிராக பல ஹாஷ்டேகுகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதற்கு காரணம், யூடுப் மற்றும் டிக்டாக்கில் பரவிய சமூக விரோத விடியோக்கள்.

அதில் தொடக்கமாக அமைந்தது, டிக்டாக்கில் பிரபலமான பைசல் சித்திகின் விடியோதான். சமீபத்தில் இவர் ஒரு விடியோவை பதிவிட்டார். அதில் அவர் ஒரு பெண்ணின் மீது "ஆசிட் தாக்குதல்" நடத்துவது போல ஒரு விடியோவை பதிவிட்டார். அந்த வீடியோ கூறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில், டிக்டாக்கிலிருந்து அவர் அந்த விடியோவை நீக்கினார். ஆனால் அவர் செய்த இந்த செயல், உலகம் முழுவதும் வைரலானது. அது மட்டுமின்றி, அதே போல பல மோசமான விடீயோக்களை பலர் பதிவு செய்து வந்ததால், டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டுமென பல தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்து, ஹாஷ்டேக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கூகுள் பிளே ஸ்டோரில் அந்த செயலியை 1 பில்லியன் (100 கோடி) மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலுக்கு முன், டிக்டாக் செயலியின்  மதிப்பு 4.6 ஆக இருந்த நிலையில், பலர் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டதால், அதன் மதிப்பு 3.0, 1.7, 1.2 என சரிந்துகொண்டே வந்தது. 

இதனை கருத்தில் கொண்ட கூகுள் நிறுவனம், டிக்டாக் செயலிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது. முதலில் 2 மில்லியன் மக்களின் எதிர்மறையான விமர்சனங்களை நீக்கியுள்ளதால், அதன் மதிப்பு 1.6 ஆக உயர்ந்தது. ஆனால், டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் எனும் நோக்குடன் அந்த செயலுக்கு 1 ஸ்டார் மட்டுமே அளித்து எதிர்மரையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் மீண்டும் டிக்டாக் செயலியின் மதிப்பும் குறைய தொடங்கியது.

இந்நிலையில், அதனை உயர்த்தும் விதமாக, கூகிள் நிறுவனம் தற்பொழுது 6 மில்லியன் மக்களின் எதிர்மறையான விமர்சனங்களை நீக்கியுள்ளது. இதனால் தற்பொழுது அந்த செயலியின் மதிப்பு 4.4 ஆக உள்ளது. ஏற்கனவே 2 மில்லியன் விமர்சனங்களை நீக்கிய நிலையில், மொத்தமாக 8 மில்லியன் விமர்சனங்களை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக