Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 7 மே, 2020

8 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை: ஆந்திராவில் சர்ச்சை!!

விசாகப்பட்டினத்தில் தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் கெமிக்கல் ஆலை ஒன்றில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனையால் அந்த பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் உள்ள பொதுமக்கள் உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிகிறது. 
 
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த வாயு கசிவால் 8 பேர் பலியாகியுள்ளதாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும் அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!