மேலும் முன்பே முன்பதிவு செய்த எஸ்20 வாடிக்கையாளர்கள் இந்தியாவில் கேலக்ஸி எஸ்20,கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும்
கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா வாங்கும்போது மேம்படுத்தல் சலுகைகளுடன் ரூ.5000 வரை கூடுதல் போனஸைப் பெறலாம். மாற்றாக
எச்டிஎம் வங்கி கார்டுகள் வழியாக ஸ்மார்ட்போன் வாங்கப்பட்டால் அவர்கள் ரூ.6000வரை கேஷ்பேக் பெறமுடியும்.
கேலக்ஸி எஸ்20பிளஸ் மற்றும் எஸ்20 அல்ட்ரா முன்பதிவு செய்பவர்களுக்குரூ.11990 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ்+ ரூ.1999 விலைக்கு பெறலாம் மற்றும் கேலக்ஸி S20 ப்ரீ-புக்கிங் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி பட்ஸ்+ ஐ 2999 ரூபாயில் பெறலாம். இந்த சலுகையை ஜூன் 15 க்குள் ரீடீம் செய்யலாம்.
பின்பு கேலக்ஸி எஸ்20பிளஸ் ம்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ப்ரீ-புக்கிங் வாடிக்கையாளர்கள் 3999 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேர்+ சலுகைகளை ரூ.1999 விலையில் பெறலாம். இந்த சலுகையை ஜூன் 15 க்குள் ரீடீம் செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கேலக்ஸி எஸ்20 சந்தாதாரர்களுக்கு இரட்டை தரவு நன்மைகளையும் வழங்கும். பின்பு கேலக்ஸி எஸ்20சிரீஸ் வாடிக்கையாளர்கள் டியூப் பிரீமியத்திற்கான நான்கு மாத சந்தாவைப் பெற தகுதியுடையவர்கள்.
கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.66,999-ஆக உள்ளது.
கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.73,999-ஆக உள்ளது.
கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.92,999-ஆக உள்ளது.
டிஸ்பிளே வசதி
சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன் 563ppi
பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன்525ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவசதியுடன் 511ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த மூன்று ஸ்மாரட்போன்களும் எச்டிஆர் 10 + சான்றிதழுடன் 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் புதுப்பிப்பு வீதத்துடன் வருகின்றன.சாம்சங் கேலக்ஸி எஸ்20 கேமரா வசதி
சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் கேமரா வசதி
சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா+ 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா கேமரா வசதி
கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா கேமரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 108எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 40எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
அருமையான சிப்செட் வசதி
கேலக்ஸி எஸ்20 சீரிஸ் சாதனங்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசிதயுடன் 12GB of LPDDR5 ஆரவையும் கொண்டுள்ளது, மேலும் கேலக்ஸி எஸ்20 5ஜி சாதனம் ஆனது 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. இதுதவிர கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி சாதனங்கள் 128ஜிபி/512 உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும்
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
பேட்டரி அமைப்பு
கேலக்ஸி எஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 45வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 10
இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது, மேலும் ஜி.பி.எஸ்., கலிலியோ, க்ளோனாஸ், பீடோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த மூன்று கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக