Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 மே, 2020

ஆப்பிள் மேக்புக் ப்ரோ இந்தியாவில் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, அந்தவரிசையில்,13-இன்ச் மேக்புக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது, அந்நிறுனம். குறிப்பாக இந்த சாதனம் அதிநவீன வசதிகளுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஆப்பிள் 13-இன்ச் மேக்புக் ப்ரோ (2020) மாடலில் மேஜிக் கீபோர்டு, 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

13-இன்ச் மேக்புக் ப்ரோ (2020) மாடல் ஆனது 2560x1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது,மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

புதிய 13-இன்ச் மேக்புக் ப்ரோ 2000 ஜிபி எஸ்எஸ்டி வரை கான்ஃபிகர் செய்ய முடியும். மேலும் இதன் பேஸ் வேரியண்ட் 256ஜிபி எஸ்எஸ்டியுடன் கிடைக்கிறது. பின்பு என்ட்ரி லெவல் மாடல்களில் 8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸரும், டாப் எண்ட் மாடலில் முற்றிலும் புதிய 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் வழங்கப்படுகிறது

இதனுடன் 32GB 3733MHz LPDDR4X ரேம் வழங்கப்படுகிறது,இத்தகைய அம்சம் கொண்ட முதல் 13-இன்ச் மேக் நோட்புக் மாடலாக இது இருக்கிறது. மேலும் புதிய மாடலில் பட்டர்ஃபிளை கீபோர்டுக்கு மாற்றாக மேஜிக் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது. டச் பார் மற்றும் டச் ஐடி வசதியுடன் எஸ்கேப் பட்டனும் வழங்கப்பட்டுள்ளது.

பின்பு ரெட்டினா டிஸ்பிளே, ட்ரூ டோன் தொழில்நுட்பம், ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப் மற்றும் மேக் ஒஎஸ் கேட்டலினா இயங்குதளம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி +256ஜிபி கொண்ட 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலின் விலை ரூ.1,22,990-என்றும், பின்பு 16ஜிபி + 1000ஜிபி கொண்ட 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலின் விலை ரூ.1,94,900 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேக் நோட்புக்கில் சிறந்த தட்டச்சு அனுபவத்தை வழங்கும் விசைப்பலகைக்கு மேஜிக் விசைப்பலகை டச் பார் மற்றும் டச் ஐடியுடன் இயற்பியல் எஸ்கேப் விசையையும் கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 58வாட் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம், எனவே 10 மணிநேர வரை இணையத்தை அருமையாக பயன்படுத்தலாம்.

மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் பிளேபேக்கிற்கான சிறந்த ஆடியோ வசதி, வைஃபை, யுஎஸ்பி போர்ட்,3.5எம்ம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக