Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 23 மே, 2020

வாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி!

 வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்பில் கியூஆர் கோட் வசதி வழங்கப்படுகிறது

வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக புதுப்புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்பில் கியூஆர் கோட் வசதி சேர்க்கப்பட்டுள்ளது

வாட்ஸ்அப் பீட்டா 2.20.171 பதிப்பில் கியூஆர் கோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கியூ ஆர் கோட் அம்சத்தினை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவின் ப்ரோஃபைல் பகுதியில் இயக்க முடியும். கியூஆர் கோடுகளை நண்பர்களுக்கு அனுப்பி, உங்களது நம்பரை பகிர்ந்து கொள்ள முடியும்

கியூஆர் கோடினை அனுப்புவதோடு மற்றவர்களின் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்து அதனை காண்டாக்ட் லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஏற்கனவே உருவாக்கிய கியூஆர் கோடினை வைத்து கொள்ளவோ அல்லது ரீசெட் செய்யவும் முடியும்

முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளதால், இந்த அம்சம் விரைவில் ஸ்டேபில் பதிப்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்

முன்னதாக இதேபோன்ற அம்சத்தினை நேம்டேக் எனும் பெயரில் இன்ஸ்டாகிராம் வழங்கி வருகிறது. இதை கொண்டு இன்ஸ்டாவில் உள்ள மற்ற நண்பர்களை கண்டுபிடிக்க முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக