>>
  • மகாமக குளத்தில் 12 மகாமகங்களுக்கு சமமான புண்ணிய பலன் பெற விரும்புகிறீர்களா?
  • >>
  • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா பற்றிய பதிவுகள்
  • >>
  • 13-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 2025-2026 சனிப்பெயர்ச்சி – திருக்கணிதம் vs. வாக்கிய பஞ்சாங்கம்
  • >>
  • 11-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நரம்பு கோளாறுகளுக்கு தீர்வு வழங்கும் பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!
  • >>
  • 10-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 09-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • சர்ப்ப தோஷம் நீக்கும் பரிகாரத் தலம் – திருவோத்தூர்
  • >>
  • 06-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 25 மே, 2020

    ரம்ஜான் சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவித்துள்ள சூப்பர் சலுகை.!


    ரூ.786 பிஎஸ்என்எல் திட்டம்
    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரம்ஜான் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் ரூ.786 மதிப்புடைய திட்டத்தை அறிமுகம் செய்து, அதில் 30ஜிபி அளவிலான அதிவேக டேட்டா ஆகியவைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 786டால்க் டைம் உடன் 90நாட்கள் வேலிடிட்டியுடன் வெளிவந்துள்ளது.
    ஒவ்வொரு வருடமும் ஈகைத்திருநாள் மற்றும் ரம்ஜானுக்கு ரூ.786 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்வது அரசாங்கத்திற்கு
    சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு பாரம்பரியமாகும். கடந்த ஆண்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் இதே போன்று திட்டங்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆனால் இந்த புதிய ரூ.786 பிஎஸ்என்எல் திட்டம் கேரளா, குஜராத், மற்றும் ஆந்திரா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைப்பதாகத் தெரிகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த ரூ.786 திட்டம் அனைத்து வட்டங்களிலும் உள்ள பிஎஸ்என்எல் பயனர்களால் அணுக முடியாது.

    மேலும் புதிய ரூ.786 பிஎஸ்என்எல் திட்டத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.190திட்டத்தின் மீது அடுத்த நான்கு நாட்களுக்கு புல் டால்க் டைம் ஆபரை அறிவித்துள்ளது. அதாவது மே 23 தொடங்கி மே 26 வரை, உங்கள் ப்ரீபெய்ட் பிஎஸ்என்எல் சிம் வழியாக ரீசார்ஜ் செய்யப்படு ரூ.190 திட்டமானது முழு பேச்சு நேரத்தை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புல் டால்க் டைம் ஆபரை பெற்றுள்ள ரூ.190-ரீசார்ஜ் திட்டம் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது,அதிஷ்டவசமாக அது தமிழ்நாடு மற்றும் சென்னை வட்டங்களிலும் அணுக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது,
    மேலும் அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறவனமான BSNL Wi-Fi சேவையானது நாடு முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்
    போகிறது. இந்த திட்டமானது ரூ.25-க்கு தொடங்கி பல்வேறு சலுகையோடு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
    அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு நகரங்களில் வைபை வசதியை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுவதும் அதிவேக இணைய இணைப்பை பரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    எதிர்காலத்தில் பொது இடங்கள், பூங்காக்கள், நூலகங்கள், தபால் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வைபை நெட்வொர்க்கை அமைக்க முடிவெடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அதன்படி வைபை நெட்வொர்க் நிறுவப்படும் அனைத்து இடமும் வைபை ஹாட்ஸ்பாட் மண்டலம் எனவே அழைக்கப்படும். இந்த வைபை சேவையானது இலவசமாக ஒரு வரம்பு வரை
    மட்டுமே பயன்படுத்தலாம். இந்த வைபை ஹாட்ஸ்பாட்டானது வாரணாசியில் இருந்து தொடங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் வழங்கப்படும் அதிவேக இணையத்தை வைபை காலிங் வசதியை இயக்க வேண்டும் என்பது முக்கியமானது.
    வைபை காலிங் வசதியை இயக்கியதற்கு பிறகு தங்களது 10 இலக்கு மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அதன்பின் கெட் பின் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அப்படி கிளிக் செய்தவுடன் 6 இலக்கு பின் எண்ணை தங்களுக்கு வரும். இந்த பின்னை பதிவிட்டு பிஎஸ்என்எல் வைபை வசதியை இயக்கலாம். இந்த வைபை வசதியை ஆக்டிவேட் செய்தவுடன் முதல் அரை மணிநேரத்துக்கு இணையத்தை பயன்படுத்த முடியும். அரை மணிநேரம் முடிந்த பிறகு பிஎஸ்என்எல் வைபை கூப்பன்களை வாங்க வேண்டும். இந்த
    கூப்பன்களானது கிராமப்புறங்களில் மூன்று வகையாக கிடைக்கிறது. அதன்படி ரூ.25, ரூ.45, ரூ.150 ஆகிய விலையில் கிடைக்கும்.
    Rural Wi-Fi திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 25 ரூபாயில் 7 நாட்கள் வரை செல்லுபடியாகும் வகையில் 2 ஜிபி டேட்டாவை தருகிறது. அதேபோல் 150 ரூபாயில் 28 நாட்களுக்கு 28 ஜிபி திட்டத்தை பெறலாம். அதேபோல் இந்த வைபை திட்டமானது நகரப்புறங்களில் சுமார் 17 திட்டங்களில் கிடைக்கிறது. அவை ரூ.10-க்கு தொடங்கி ரூ.1999 வரை கிடைக்கிறது. பிஎஸ்என்எல் வைபை திட்டம் விரைவாக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.
    அதேபோல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 4ஜி சேவையை ஏற்கனவே துவங்கி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது,
    இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் தளங்களை 4ஜி-க்கு மேம்படுத்த விரைவான வேகத்தில் செயல்பட்டு வருகிறது. எளிமையாக கூறவேண்டும் என்றால், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவைக்காக ஒரு பெரிய திறக்கப்படாத
    சந்தையே காத்திருக்கிறது. எனவே பிஎஸ்என்எல் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை உருவாக்கும் என்று தான்
    எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சந்தையில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தாமதமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி மொபைல் சேவைகளை அறிமுகப்படுத்தும்போது, மற்ற டெலிகாம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சிறப்பான திட்டங்கள் மற்றும் அடேங்கப்பா என சொல்லவைக்கும் கொண்வர முயற்ச்சி செய்யும். தேபோல் தற்போதைய (பழைய) சிம் கார்டுகள் மாற்றப்பட்டு உங்களுக்கு புதிய 4ஜி சிம் கார்டு வழங்கப்படும். பின்பு இந்த சலுகை இந்தியாவின் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அன்று துவங்கப்பட்டது. மக்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பிஎஸ்என்எல்லில் சேர்ந்து ரூ.100-க்கும் அதிகமாக
    ரீசார்ஜ் செய்யும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சிம் கார்ட் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக