முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு நெஞ்சு
வலி
காரணமாக டெல்லியில் உள்ள
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து இருக்கும் செய்தியில், ''மன்மோகன் சிங்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதிய மருந்துகளுக்கு அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய மருத்துவத்தால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் வராமல் தடுக்க கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவரை இருதய நோய் நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளனர்.

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக நீடித்தவர் மன்மோகன் சிங். 87 வயதாகும் மன்மோகன் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் முக்கிய இடத்தை வகிப்பவர். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எப்போது மன்மோகன் சிங்கிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்.
கடந்த 2008ஆம் ஆண்டு உலகமே பொருளாதார பின்னடவை சந்தித்தபோதும், மன்மோகன் சிங்கின் திறமையான பொருளாதார ஆளுமையால் இந்தியா எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இதற்காக இன்றும் நாடு இவரைப் பாராட்டி வருகிறது.
2009ல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அரசியல் வித்தியாசமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் மன்மோகன் சிங் விரைந்து குணமடைய வாழ்த்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக