Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 29 மே, 2020

சமூக வலைத்தளங்களில் பொதுமுடக்கம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!






சமூக வலைத்தளங்களில் பொதுமுடக்கம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் தாக்கத்தால், 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர்.  
இந்நிலையில்,தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு  வருகிற நிலையில், சேலத்தில் சமூக வலைதளங்களில், பொதுமுடக்கம் பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  
மேலும், சமூக வலைதளங்களில், சேலம் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் முழு பொதுமுடக்கம் என வதந்தி பரவி வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!