Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 9 மே, 2020

குழந்தையுடன் கண்ணாம்பூச்சி விளையாடிய நாய் - வைரல் ஆகும் வீடியோ!

வீட்டில் செல்லப்பிராணி வளர்க்கலாம் என்று நினைத்தவுடன் அனைவரின் மனதிற்கு உடனே நினைவு வருவது நாயாகத் தான் இருக்கக்கூடும். நாய் நன்றி உள்ள பிராணி என்பதைக் காட்டிலும் நாய் அறிவுள்ள செல்லப்பிராணி என்று தான் கூற வேண்டும். அப்படி அறிவில் மிஞ்சிய ஒரு செல்லப்பிராணி தனது உரிமையாளரின் குழந்தையுடன் கண்ணாம்பூச்சி விளையாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

நாய் கண்ணாம்பூச்சி விளையாடும் வீடியோ

பெல்ஜிய மாலினாய்ஸ் (Malinois) என்று அழைக்கப்படும் இந்த நாய் வகை, தனது எஜமானுடன் கண்ணாம்பூச்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த கிளிப்பை இன்ஸ்டாகிராம் கணக்கு ஜி.எஸ்.டி பிரண்ட் என்ற பக்கம் பதிவிட்டு வைரல் ஆகியுள்ளது. இந்த நாய் உண்மையில் விளையாடுகிறதா? என்ற தலைப்பின் கீழ் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ வைரல்

இந்த அபிமான வீடியோவை முதலில் ஒமர் வான் முல்லர் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஊரடங்கின் போது வீட்டில் ஒரு செல்லப்பிராணி இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு அது கூடுதல் உற்சாகம் தான் என்பதை இந்த வீடியோ தெளிவாக உணர்த்துகிறது. மொபைலை மட்டும் நோண்டிக்கொண்டிருக்காமல் செல்லப்பிராணியுடன் விளையாடுவதும் சிறந்த பொழுதுபோக்குத் தான்.

நாய்க்கு பெயர் 'மங்கி'யா?

'மங்கி'(monkey) என்ற பெயர் கொண்ட இந்த நாய் ஒரு சிறுமியுடன் ஒளிந்து விளையாடுவதை வீடியோ தெளிவாகக் காட்டுகிறது. 'மங்கி, கண்ணாம்பூச்சி விளையாடுவோம், நீ போய் எண்ணுப் போ' என்று குழந்தை சொல்வதை நம்மால் தெளிவாகக் கேட்க முடிகிறது. குழந்தை சொன்னதைக் கேட்டு மங்கி உடனே திரும்பி, அவருக்குப் பின்னால் உள்ள சுவருக்குச் சென்று, தனது இரண்டு கால்களிலும் எழுந்து நின்று கண்களைக் காலால் மூடுகிறது.

மிகவும் ரசிக்கக்கூடிய விஷயம் இது தான்

வீடியோவின் மிகவும் ரசிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், மங்கி அந்த பெண் குழந்தை சென்றுவிட்டதா, எங்கே மறைந்திருக்கும் இடத்தைப் பார்க்கலாம் என்பதைப் போன்று திருட்டுத் தனமாகப் பார்க்க முயல்கிறது. ஆனால், குழந்தை அதைப் பார்த்துவிட்டு 'இல்லை எட்டிப் பார்க்காதே' என்று சொன்னதுடன், மங்கி மீண்டும் சுவர் பக்கமாகத் திரும்பித் தொடர்ந்து எண்ணுவதைத் தொடர்கிறது.

என்னைக் கண்டுபிடிக்க, வரலாம்

'என்னைக் கண்டுபிடிக்க, வரலாம்' என்று சிறுமி சொல்லும் தருணம் மங்கி எண்ணுவதை நிறுத்திவிட்டு அவளைத் தேடித் திரும்புகிறது. இந்த வீடியோ இணையம் முழுதும் பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பதிவிடப்பட்ட சில நேரத்திலேயே வீடியோ வைரல் ஆகிவிட்டது. இந்த பதிவிற்குப் பலரும் தங்களின் கருத்துக்களை கமெண்டில் பதிவிட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக