உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க நீண்ட காலம் ஆகலாம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தற்போது மருந்து கண்டுபிடிக்க ஆகும் காலம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள அவர் “கொரோனாவுக்கு பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் நல்ல பலன் தரக்கூடியவையாக இல்லை. மேலும் அதனால் மக்கள் பழைய சகஜமான வாழ்க்கைக்கு திரும்ப முடியுமா என்பதும் கேள்வி குறியாகியுள்ளது. சரியான மருந்து கண்டுபிடிக்கும் வரை உலகம் ஆபத்திலிருந்து மீள முடியாது.
இது மாதிரியான வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க 5 ஆண்டுகள் ஆகலாம், ஆனால் மருத்துவ விஞ்ஞானிகளின் அயராத முயற்சியால் 9 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரையிலும் முடிந்தளவு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது “ என தெரிவித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக