Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 மே, 2020

முடி வளர்ச்சியை பாதிக்கும் பொடுகை நீக்கும் வழிகள்.....!!

தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள ஷாம்பை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு  காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெய்யை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால்,  பொடுகு பிரச்சனை தீரும்.
 
ஆலிவ் எண்ணெய்யுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
 
ஆப்பிள் சீடர் வினிகர் தலைமுடியின் வேர்க்கால்களில் பிஎச் அளவை அதிகரிக்கின்றன. அதனால் பூஞ்சைகள் தொல்லை குறைவதோடு, பொடுகையும்  கட்டுப்படுத்துகிறது.
 
ஈரமான தலைமுடியில், கை நிறைய பேக்கிங் சொடாவை எடுத்துக் கொண்டு, தலையின் வெர்க்கால்களில் படும்படியாக, நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.  அதன்பின் தலையை அலசிக் கொள்ளலாம். இப்படி செய்யும்போது, ஷாம்புவைப் பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் சோடா பொடுகுத் தொல்லை நீக்கும். பூஞ்சையைக்  கட்டுப்படுத்தும்.
 
5 ஸ்பூன் அளவுக்குத் தேங்காய் எண்ணெயை எடுத்து, முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்து இரவு முழுக்க விட்டுவிடவும். காலையில் எழுந்து,  நல்ல தரமான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.
 
2 ஸ்பூன் எலுமிச்சை சாறினை எடுத்து வேர்க்கால்களில் இறங்கும்படி தேய்த்து மசாஜ் செய்யவுமம். அதன்பின் ஷாம்பு கொண்டு தலையை அலசிவிட்டு, மீண்டும் ஒரு கப் தணிணீரில் எலுமிச்சை சாறினைக் கலந்து, மீண்டும் தலையை அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு இரண்டு முறை செய்தாலே, பொடுகுத்  தொல்லையிலிருந்து விடுபட முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக