ஒரு நாள் அடர்ந்த காடுப்பகுதிக்கு அரசன் வேட்டைக்கு வந்தபோது கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டான். அவனுக்குத் தாகமும், பசியுமாய் இருந்தான். தூரத்தில் ஒருவன் இருப்பதைக்கண்டு அவனருகில் சென்று தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டார். அந்த ஆள் தன்னுடைய குடுவையிலிருந்த நீரைக் கொடுத்தான். பின் தான் கொண்டுவந்த கம்பங்கூழையும் தந்தான்.
வறுமையிலும் இரக்கக்குணத்தோடு இருக்கும் இவனுக்கு அரசன் தனக்குச் சொந்தமான சந்தனவனத்தைப் பரிசாக அளித்து அனுமதிச் சீட்டும் வழங்கிவிட்டு சென்றான்.
ஆறு மாதம் கழித்து மீண்டும் வேட்டையாட வந்தான். அன்றொருநாள் பார்த்த ஒருவனை தேடினான் அரசன். அவனும் அரசனைப் பார்த்ததும் ஓடிவந்து, நல்லாயிருக்கீங்களா? உங்க உதவிக்கு ரொம்ப நன்றிங்க! என்றான்.
இப்போ வசதியாயிருக்கியா? என்று விசாரித்தான் அரசன். ரொம்ப நல்லா இருக்கேங்க. முதல் நாள் மரத்தை வெட்டினப்போ அதிகாரிங்க வந்துட்டாங்க! அனுமதிச்சீட்டைக் காண்பிச்சதும், நீ சிரமப்படாதே நாங்களே வெட்டிக்கொள்கிறோம் என்றனர். முந்தி தினம் கால்னா கிடைக்கும். இப்ப ஒரு ரூபாய் தராங்களே! அதோட கூடமாட வெட்டறதுதான்! என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.
அரசன், ஏமாற்றுப்பேர்விழிகள் இல்லாத இடமே இருக்காதா? என்று அயர்ந்துபோனான். பின், சந்தனமரத்துக்கும் சவுக்குமரத்துக்கும் வித்தியாசம் தெரியாதவனாக இருக்கிறானே என்று நினைத்துக்கொண்டார்.
நீதி :

நமக்கு வரும் அதிஷ்டத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக