தெலுங்கானாவில் தவித்து வந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 1,200 பேரும் சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலையின்றி உணவிற்காக தவித்து வருகின்றனர்.
இவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு , மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. வெவ்வேறு மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை அந்தந்த சொந்த மாநில அரசுகள் மீட்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. இரு மாநிலங்களின் ஒப்புதலோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.
அதன்படி, தெலுங்கானாவில் தவித்து வந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 1,200 பேரும் சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தெலுங்கானாவில் இருந்து 1200 ஜார்கண்ட் தொழிலாளர்களும் 24 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில் பயணித்து சொந்த ஊர் செல்ல உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக