பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்றோ, அல்லது வீட்டிலேயே ஏதேனும் பொருட்களை வைத்து அழகு படுத்திக் கொள்கின்றனர். அதேபோல இந்த கோடைகாலத்தில் ஆண்களும் தங்களது சருமத்தை பாதுகாக்க விரும்பினால் இயற்கையான சில குறிப்புகளைக் கொண்டு பாதுகாக்கலாம், எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
ஆண்கள் அழகு பெற இயற்கை வழிமுறைகள்
பெரும்பாலும் கோடைகாலத்தில் முகம் வறண்டு காணப்படும் இந்த வறட்சியை போக்க எலுமிச்சம் பழ சாற்றை வெள்ளரிக்காய் உடன் அரைத்து வாரத்திற்கு இருமுறை இரவில் தேய்த்து காலை முகம் கழுவி வர வறண்ட சருமம் புத்துணர்வு பெற்று ஈரப்பதத்துடன் காணப்படும்.
மேலும் முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஒரு டீஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் தயிர் பொடி செய்த ஆரஞ்சு தோல் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருந்து குளிர்ந்த நீர் வைத்து அலசி வர முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.
ஆண்கள் வெளியில் சென்று வேலை செய்து வருவதால் வெயிலில் அதிகம் நிற்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் கண் எரிச்சல் ஏற்படுவது இந்த கண் எரிச்சலைப் போக்க எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சருமம் மிருதுவாகி கண்ணுக்கு சூடு தணிகிறது. மேலும் இது தலையில் உள்ள பொடுகு மற்றும் முடி உதிர்தலையும் நீக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக