Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 8 மே, 2020

தஞ்சையில் மது கடை திறந்த முதல் நாளான நேற்று பிரபல ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சாவூர் கீழவாசல் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் அருண் 39 இவர் மீது தஞ்சை கிழக்கு போலீசில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன 2012 ஆம் வருடம் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகளும் ஐந்து குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் நண்பன் கட்டையன் என்பவரது வீட்டில் கட்டையன் பிச்சாண்டி முத்து ஆகியோருடன் நண்பர்களுடன் சேர்ந்து அருண்குமார் நள்ளிரவு வரை மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரியவருகிறது.

இன்று காலை தெருவாசிகள் பார்க்கும் பொழுது அருண்குமார் தலை கை கால் பகுதிகளில் வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அருண்குமாரின் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கட்டையன் முத்து பிச்சாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக