Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 மே, 2020

அருள்மிகு பூமிநாதர் திருக்கோவில் புதுக்கோட்டை

அருள்மிகு பூமிநாதர் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. 

மூலவர் : பூமிநாதர்
அம்மன்/தாயார் : ஆரணவல்லி
தீர்த்தம் : பிருத்வி தீர்த்தம்
ஊர் : செவலூர்
மாவட்டம் : புதுக்கோட்டை

தல வரலாறு :

இந்த உலகம் நான்கு யுகங்களை சந்தித்திருக்கிறது. இதில் முதல் யுகமான கிருத யுகத்தில், பூமாதேவி கடும் தவமிருந்தாள். மேலும், எதிர்வரும் யுகங்களில் பூமியின் பாரத்தை தாங்கும் சக்தியை அதிகரித்து தர வேண்டும் என்பது அவளது வேண்டுகோள். அவள் முன் தோன்றிய சிவபெருமான், தாயே! இந்த திரேதா யுகம், துவாபர யுகத்தில் இப்பூமியைத் தாங்குவதற்குரிய சக்தியைத் தருகிறேன். ஆனால், கலியுகத்தில் இப்பூமியைத் தாங்கும் சக்தியைப் பெற இந்த தவம் போதாது.

உனது பக்தர்கள் உன்னை பூஜிப்பதன் மூலமே இந்த வலிமை உனக்கு கிட்டும். இதற்கு நாராயணனின் கிருபையும் தேவை என சொல்லி மறைந்தார். இவ்வுலகில் நல்ல பக்தர்கள் யார் இருக்கிறார்கள்? என தேடியலைந்த பூமாதேவி, பல தலங்களுக்கு சென்றாள்.

சென்ற இடமெல்லாம் ஆங்காங்கே இருந்த சுயம்பு மூர்த்திகளை பிரார்த்தித்தாள். அவள் பிரார்த்தித்த மூர்த்திகளுக்கு பூமிநாதர், பூலோகநாதர் என்ற பெயர்கள் ஏற்பட்டது. அதில் ஒன்றே செவலூர் பூமிநாதர் கோவிலாகும்.

தலப்பெருமை :

வாஸ்து நாட்களில் விசேஷ பூஜை நடக்கும் கோவில்களில் இத்தலமும் ஒன்று. 

இத்தலத்து லிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த லிங்கத்தை பூஜித்தபோது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவிதமான காப்புகளை சாற்றி பூஜித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது.

செவலூர் அருகிலுள்ள பிருத்வி தீர்த்தம் இன்று சாதாரண குளமாகத் தோற்றமளிக்கிறது. இதன் மகிமை அளவிட முடியாதது. பித்ரு தர்ப்பணத்திற்கு ஏற்ற தீர்த்தமாகவும் இந்த தீர்த்தம் விளங்குகிறது. 

மகா விஷ்ணுவால் எழுப்பப்பட்ட புண்ணியத்தலம் இதுவாகும். மூலவர் லட்சுமி நரசிம்மரின் மீது வருடத்தின் எல்லா நாட்களும் சூரிய ஒளி படுவது போல் கருவறை அமைந்திருப்பது வியப்பான ஒன்றாகும். 

பிரார்த்தனை :

நிலத்தகராறுகள், தடைபட்டுள்ள காரியங்கள், தொழிலில் தடை, கட்டிட வேலைகளில் பாதிப்பு, விவசாய வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு இத்தல இறைவனை பிரார்த்திக்கலாம்.

கட்டிடம் கட்டும்போது வேம்பு, ஆல், அரசு போன்ற புனித மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோஷம், நாகப்புற்றுகளை அழித்த கொடுமை, கோவில் குத்தகையை கொடுக்காமல் ஏமாற்றியது, வியாபாரத்தில் நஷ்டம், பணியில் கஷ்டம் ஆகிய துன்பங்களை அனுபவிப்பவர்கள் பூமிநாதருக்கு பூஜை செய்யலாம்.

பூகம்பத்தால் இறந்த ஜீவன்கள் நற்கதியை பெறவும், கோர்ட் வழக்குகள், உறவினர் பகை போன்றவற்றால் தடைப்பட்டுள்ள காரியங்கள், விலகுவதற்கு வாஸ்து நாட்களில் இங்கு வந்து விசேஷ பூஜை செய்பவர்களுக்கு பலன் கிட்டும். வாஸ்து நாளை தவறவிட்டவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் இப்பூஜையை நடத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக