கொரோனாவிலிருந்து மீண்ட இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தன்னை காப்பாற்றிய மருத்துவரின் பெயரை மகனுக்கு சூட்டியுள்ள சம்பவம் பலரை வியக்க வைத்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பலரை அச்சுறுத்தி வரும் சூழலில் உலக நாட்டு தலைவர்கள் சிலரையும் கொரோனா தாக்கியுள்ளது. அவ்வாறாக சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் குணமடைந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவரது காதலியும் வருங்கால மனைவியுமான கேரி சைமண்ட்ஸுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு வில்ப்ரட் லாரீ நிக்கோலஸ் ஜான்சன் என பெயரிட்டுள்ளனர். இதில் நிக்கோலஸ் என்பது போரிஸ் ஜான்சனை கொரோனாவிலிருந்து காப்பாற்றிய மருத்துவரின் பெயராகும்.
தன்னை காப்பாற்றிய மருத்துவரின் பெயரையே மகனுக்கு சூட்டியுள்ள இங்கிலாந்து பிரதமரின் பண்பு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக