மேலும் இந்த சாதனத்தை ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் வசதிக்கும் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் ரூ.3,999-விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் ஒப்போ என்கோ டபிள்யூ31 இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகமான சமயத்தில் ரூ. 4,499 என விலை நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் இந்த இயர்பட்ஸ் என்கோ ஃப்ரீ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலுடன் சேர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு என்கோ ஃபிரீ விற்பனை மட்டும் ஏற்கனவே துவங்கியது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
ஒப்போ என்கோ டபிள்யூ31 ட்ரூ சாதனம் ஆனது ப்ளூடூத் 5.0 மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களுடன் இணைந்து கொள்ளும், எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஒப்போ என்கோ டபிள்யூ31 ட்ரூ சாதனத்தில் வால்யூம், கால் மற்றும் பாடல்களை மாற்ற தொடுதிரை வசதி, 7நானோ மீட்டர் டிரைவர், டூயல் மைக்ரோபோன்கள், பிரீனோ வாய்ஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட ஆதரவுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தபுதிய ஒப்போ இயர்பட்ஸ் கேசில் 350 எம்ஏஹெச் பேட்டரி வசதி உள்ளது,மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்கவே இருக்காது.
ஒப்போ நிறுவனத்தின் இந்த இயர்பட்ஸ் அனைவரது காதுகளிலும் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில், மூன்று வித அளவுகளில் இயர்டிப்களுடன் வழங்கப்படுகிறது. மேலும் கேசுடன் சேர்த்து இது 15மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இந்த சாதனத்தை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக