
உலகின்
இரண்டாவது பொருளாதார நாடான சீனாவில் கொரோனாவின் தாக்கத்தினால், அந்த நாட்டின்
பொருளாதாரம் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது எனலாம்.
இதற்கிடையில்
இதனை மேற்கொண்டு இன்னும் விரிவுபடுத்தும் விதமாக அமெரிக்கா தற்போது, கொரோனாவுக்கு
காரணம் சீனா தான். ஆக சீனா அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்.
மேலும்
சீனா, அமெரிக்காவின் பொருளாதார இழப்புக்கு நஷ்ட ஈடு கொடுத்தே ஆக வேண்டும்
என்றெல்லாம் கூறி வருகின்றது அமெரிக்கா. இன்னும் ஒரு படி மேலே போய் சீனாவுடன் எந்த
உறவும் வேண்டாம். சீனா பொருட்களுக்கான வரியினை அதிகரிக்க போவதாகவும் மிரட்டி
வருகிறது அமெரிக்கா.
திட்டமிடப்பட்ட
கணிப்பை அடைவது கஷ்டம் தான்
சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங் சீனா
அதன் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திற்கு திரும்புவது கஷ்டம் தான் என்று அதிரடியாய்
ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். அமெரிக்கா கொடுத்த வாக்குறுதிகளை
சீர்திருத்தங்களை வழங்குவதில் தவறி விட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும்
சந்தையின் குருட்டுத் தன்மையை நாம் புறக்கணிக்க கூடாது. திட்டமிட்ட
பொருளாதாரத்தின் பழைய நிலையை அடைய முந்தைய பாதைக்கு திரும்பக் கூடாது என்ற
புரிதலுக்கு நாங்கள் வந்துள்ளோம்.
ஜி ஜின்பிங்
கடந்த சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் கூடியிருந்த
மக்கள் பேரவையில் கூட்டத் தொடரில், அரசியல் ஆலோசகர்களிடம் ஜி ஜின்பிங்
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து
வர்த்தகம் முதல் கொரோனா வைரஸ் வரை பல பிரச்சனைகளை சீனா எதிர்கொண்டு வரும்
நிலையில், இப்படி ஒரு அறிக்கை வெளி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா குற்றச்சாட்டு
குறிப்பாக அறிவுசார் சொத்து திருட்டு
மற்றும் பொருளாதார பாதுகாப்புவாதம் உள்ளிட்ட குற்றசாட்டுகள், இராணுவம் சம்பந்தமான
குற்றசாட்டுகள் என பல விமர்சனத்தினை வெளியிட்டது அமெரிக்கா. ஆக இதுபோன்ற
பிரச்சனைகளுக்கு மத்தியில் ஏற்கனவே சீனா கொரோனாவினால் பொருளாதார அழுத்தத்தினை
எதிர் கண்டுள்ளது.
பல காரணங்கள்
மேலும் நிலவி வரும் உலகளாவிய மந்த
நிலை, வர்த்தக முதலீட்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி, நிதிச் சந்தையில் உள்ள
பிரச்சனை என பலவற்றையும் ஜி ஜின்பிங் பட்டியலிட்டுள்ளார். மேலும் குறைந்துள்ள
சர்வதேச தொடர்புகள் மற்றும் அதிகரித்து வரும் பதற்றங்கள் என பலவும் இந்த
வீழ்ச்சிக்கு காரணமாக அமையலாம் என்றும் கூறியுள்ளார்.
பொருளாதார கணிப்பு
இல்லை
ஆக கொரோனா வைரஸினால் ஏற்பட்ட
பிரச்சனையினால், இந்த ஆண்டு பொருளாதார இலக்கை நிர்ணயிக்கும் வழக்கமான நடைமுறையை
சீன சட்டமியற்றுபவர்கள் கைவிட்டனர். மேலும் கொரோனாவினால் மிக ஆழமான பிரச்சனை
ஏற்பட்டுள்ளதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக சீனாவுக்கு கொரோனாவினாலும்,
அமெரிக்காவினாலும் இழப்பு ஏற்படும் என்பதை சீனா ஒப்புக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக