வேட்டைக்காரன் ஒருவன் இரண்டு நாய்கள் வளர்த்தி வந்தான். அவற்றில் ஒரு நாய் அவனுடன் வேட்டைக்குச் செல்லும். மற்றொரு நாய் அவனது வீட்டைக் காவல் காத்துக்கொண்டிருக்கும்.
வேட்டைக்காரன் வேட்டைக்குச் சென்று திரும்பி வீட்டுக்கு வந்ததும், வேட்டையில் கிடைத்தை வீட்டு நாய்க்கே எப்போழுதும் அதிகம் கொடுப்பான். வேட்டை நாய் அதைப் பொருட்படுத்தவில்லை.
இதேபோல் தினமும் வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்ததும், வீட்டு நாய்க்கே அதிகம் கொடுத்தான். அதைக் கண்ட வேட்டை நாய்க்கு அப்போதுதான் வருத்தம் ஏற்பட்டது.
வருத்தம் கொண்ட வேட்டைநாய், வீட்டு நாயைப் பார்த்து வேட்டையாடுவது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா? நான் வேட்டையில் சம்பாதித்து வருவதில் மட்டும் நீ அதிக பங்காகப் பெற்றுக்கொள்கிறாய். இது நியாயமா? என்று வருத்தத்துடன் கேட்டது.
அதைக் கேட்ட வீட்டு நாய் சிரித்துக் கொண்டே, நண்பனே! இதில் என்னுடைய தவறு எதுவுமில்லை. நீ என்மீது ஏன் வருத்தப்படுகிறாய். இந்த தவறு நம் எஜமானனுடையது. அவர் எனக்கு வேட்டையாடச் சொல்லித்தரவில்லை. மற்றவர் சம்பாதித்த பொருளில் பங்கு பெறத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்! என்று பதில் கூறியது.
அதைக் கேட்டதும், வேட்டை நாய் எதுவும் பேசாமல், இந்த அநியாய உலகத்தில் நியாயத்தை எதிர்பார்ப்பது தவறு என்பதை உணர்ந்து அமைதியாகச் சென்றது.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக