Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 மே, 2020

உயிருள்ள குதிரை சிலை போன்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும் தாவும் பரி பஞ்ச கல்யாணிக் குதிரை!

 

உயிருள்ள குதிரை சிலை போன்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும்‌ தாவும் பரி பஞ்ச கல்யாணிக் குதிரை!


அதிசயத்தக்க தாவும் பரி:

இந்த கோயிலில் உள்ள தாவும் பரி என்ற ஒற்றை கல்லில் செதுக்கப்பட்ட குதிரை உள்ளது. இதன் மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல அமைக்கப்பட்டுள்ளது.

சிவ பெருமான் நரியைப் பரியாக்கிய புராண நிகழ்வு நடந்த பெருமை வாய்ந்த கோயிலாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தாவும் பரி குதிரையை அங்கம் அங்கமாக பார்த்தால் நம்மில் ஒரு பிரமிப்பு ஏற்படுவதோடு, அது ஒரு உயிருள்ள குதிரையோ என எண்ணத் தோன்றும் அளவிற்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குதிரைகளிலேயே மிக அழகு வாய்ந்த குதிரை என்றால் பஞ்ச கல்யாணி குதிரையாகும்.
பஞ்ச கல்யாணி என்றால் அந்த குதிரைக்கு நான்கு கால்களிலும் அதன் கணுக்கால் பகுதியில் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதோடு நெற்றியில் பொட்டு வைத்தது போல வெள்ளை நிறத்தில் இருக்கும். இப்படி ஒரு குதிரைக்கு ஐந்து இடத்தில் வெள்ளையாக இருந்தால் அது பஞ்சகல்யாணி குதிரை என்பார்கள்.

கல்லுக்கு உயிர் கொடுத்த முன்னோர்கள்:

பஞ்ச கல்யாணிக்கான மேற்சொன்ன வெள்ளை நிறம் ஐந்து இடத்தில் இருக்கும் அந்த அழகை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தாவும் பரி குதிரை சிலையிலும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் குதிரைக்கு பற்கள் கூட வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.

கவிபாடும் கற்சிலைகள்

இங்கு செதுக்கப்பட்டுள்ள கற்சிற்பங்கள் அனைத்தும் உயிரோட்டமுடன், கவிபாடக்கூடியதாக பல அம்சங்களுடன் இருக்கின்றது. இங்குள்ள பல தூண்கள் கவிபடும் விதத்தில் ஈடு இணையற்ற அம்சத்துடன் விளங்குகிறது.

இங்குள்ள 1000 கால் மண்டபம் 12 அடி உயரம் கொண்ட அகோர வீரபத்திரர், ரண வீரபத்திரர் சிலை பிரமிக்க வைக்கும் விதத்தில் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இங்குள்ள சிற்பங்கள் அனைத்திற்கும் உயிரோட்டம் தெரியும் வகையில் கை, கால்களில் நரம்பு செல்வது கூட தெரியும் விதத்தில் உள்ளது. அதோடு தலை முடி கூட சன்னமாக சீவப்பட்டது போல உள்ளது.

கற்சங்கிலி

தற்போதுள்ள நவீன இயந்திரங்களால் கூட செய்ய முடியாத அளவிற்கு ஒரே கல்லிலான 10 -15 வளையங்களை கொண்ட கற்சங்கிலி செதுக்கப்பட்டு அது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ளது காண்போரை வியக்க வைக்கிறது.

புழுங்கல் அரிசி நெய்வேத்தியம்

எல்லா ஆலயங்களிலும் பச்சரி கொண்டு சுவாமிக்கு அமுது படைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆவுடையார் கோயிலில் 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால் செய்யப்பட்ட அமுது நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய், கீரை சேர்த்து அமுது படைக்கப்படும் சிறப்பு இந்த கோயிலில் மட்டும் தான் காண முடியும்.

சுவாமிக்கு படைக்கப்படும் 6 கால பூஜைக்கான அமுது படைக்கப்படும் அடுப்பின் நெருப்பு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதுவரை அணைந்ததே இல்லை என்ற அதிசயத்தக்க விஷயமும் இங்கு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக