வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டிய நெருக்கடி இப்படி எல்லா புறமும் நெருக்கடிகள் அதிகரிப்பு, வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் இப்படி பல விஷயங்களால் நிம்மதியான தூக்கம் இல்லாமல், குறிப்பாக இந்தியர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வீடுகளில் இருக்கும் பிரச்சினைகள், அலுவலக நெருக்கடிகள், சம்பளப் பிடித்தம் இப்படி நிறைய விஷயங்கள் சூழ்ந்து கொண்டிருப்பதால், இன்னும் ஏராளமான பிரச்சினைகளால் இந்தியர்கள் நாள் கணக்கில் வாரக்கணக்கில் சரியான தூக்கம் இன்றி தவிப்பதாக சில ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் சிலர் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
வொர்க் ஃப்ரம் ஹோம் அனுபவம்
- வீட்டிலிருந்து வேலை செய்யும் இந்தியர்களில் 67% தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகிறது.
- அனிகேத் சிங், வயது 42. இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் இதற்கு முன்பு வீட்டிலிருந்து வேலை செய்தது இல்லை.
- அதனால், இவர்க்கு வீட்டில் இருந்து வேலை செய்வது மிகவும் கடினமாக இருந்தது. அது எப்படி?
- அனிகேத் சிங்கிற்கு, பள்ளிக்குச் செல்லும் வயது உடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். லாக்- டவுன் ஆரம்பித்த பிறகு, குழந்தைகளைப் பார்த்து கொள்ளவே அனிகேத் சிங்கிற்கு நேரம் போதவில்லை.
- இதனால், அவரால் சிறிது நேரம் கூட ஓய்வெடுக்க முடியவில்லை.
நாளின் தொடக்கம்
- லாக்கடவுன் ஆரம்பித்த பிறகு, அவரது நாள் தனது வழக்கமான நாளை விட இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிடும்.
- அவரது இளம் ஐந்து வயது மகன், தினமும் அதிகாலை 5 மணியளவில் இயற்கையின் அழைப்பில் கலந்துகொள்ள தனது தந்தை அனிகேத் சிங்கை இழுத்துச் கொண்டு செல்வான். அனிகேத் சிங்கின் நாள் அப்பொழுதேயே தொடங்கி விடும்.
- அதன் பின்னர், அனிகேட் தனது வீட்டின் குப்பைப் பையை எடுத்து வந்து வீட்டிற்கு வெளியே உள்ள சமூகக் குப்பைத் தொட்டியில் அப்புறப்படுத்துவார்.
- இந்த வேலையை அவர் காலை 6 மணிக்கு முன்னதாகவே செய்ய வேண்டும். இல்லையென்றால், அவரது மனைவியால் ஒரு சுத்தமான சமையலறையில் நின்று வேலை செய்ய முடியாது.
சமையலும் உதவியும்
- லாக்-கடவுன் ஆரம்பித்து விட்டதால், நாட்டின் நிலைமை இயல்பு நிலைக்கு வரும் வரையில் அவர்கள் வீட்டு பணிப்பெண்களுக்கும் விடுப்பு வழங்கி இருந்தனர்.
- பின்னர், தனது மனைவிக்கு சமையல் செய்வதிலும் மற்றும் தன் இரு குழந்தைகளுக்கு உணவளிப்பதிலும் உதவுவார்.
வேலை ஆரம்பம்
- இதன் பின்னரே, தனது மடிக்கணினி மூலம் வேலை செய்யத் தொடங்குவர். லாக்-டவுனிற்கு முன்பு, ஒரு நாளைக்கு இரவு 7 மணிக்கு முன்னரே வேலையை முடிப்பவர். தற்போது, இரவு 10 மணி ஆனாலும் கூட அனிகேத் சிங்யால் வேலையை முடிக்க இயலவில்லை. இதனால், அவர் நள்ளிரவு கடந்து தூங்க செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்.
- ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு அவரது இரண்டாவது மகன் அவரை எழுப்பி விட்டுவிடுவான். அத்துடன், அவருடைய அன்றைய நாளும் தொடங்கி விடும்.
தூக்கத்தோடு போராட்டம்
- இதேபோன்று, இருபது நாட்கள் வீட்டு வேலைகள் மற்றும் அலுவலக வேலைகள் ஆகியவற்றை கவனித்து கொண்டும் தூக்கமின்மையுடனும் போராடி கொண்டு இருந்தார்.
- கடைசியில் அனிகேத் சிங்கிற்கு, ஒரு தொழில்முறை ஆலோசகரின் உதவியைத் நாடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
- அந்த தொழில்முறை ஆலோசகர் கூறுகையில், "அனிகேத் என்பவர் தனியாக இல்லை. அவருக்கென்று ஒரு குடும்பம் உள்ளது.
- சமீபத்தில், ஒரே நேரத்தில் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு மற்றும் அலுவலக வேலைகளும் செய்பவர்கள் பலர் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனநல ஆலோசனை
- இந்த லாக்கடவுன் சமயத்தில் எங்களுக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன என்று மனநல ஆலோசகர்கள் தெரிவித்து உள்ளார்.
- மேலும், மூத்த உளவியல் ஆலோசகர் ஸ்வேதா சிங் கூறுகையில், இந்த லாக்கடவுன் சமயத்தில் உதவிப் பணியாளர்கள் அல்லது பணிப்பெண்களும் விடுப்பில் இருப்பதால், அனிகேத் போன்றவர்கள் தங்கள் பணிகளில் மற்றவர்களின் உதவியை பெற இயலாத சூழ்நிலையில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு மடங்கு வேலைகளைச் செய்ய வேண்டி உள்ளது.
- "இதனால், இது போன்ற சூழ்நிலையில் தவிக்கும் மக்கள் வேலைகளுக்காக தங்கள் மன அமைதி அல்லது தூக்கத்ததை விட்டு கொடுக்கின்றனர்.
- தூக்கமின்மையுடன் ஒப்பிடும்போது மன அழுத்தம் ஒரு பெரிய விஷயம் இல்லை.
ஆய்வு சொல்வது என்ன?
- பெங்களூரை மையமாக கொண்ட வேக்ஃபிட்.கோ (Wakefit.co) நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் சுமார் 67 சதவீதம் பேர் லாக்டவுன் காலம் ஆரம்பித்த பிறகு, முன்பை விட தாமதமாக இரவு 11 மணிக்குப் பிறகு தான் தூங்க செல்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது..
- மேலும்,1,500 பேர் சம்பந்தப்பட்ட மற்றொரு ஆய்வின்படி, லாக்டவுன் காலம் முடிந்ததும் தங்களது தூக்க அட்டவணை சிறப்பாக இருக்கும் என்று 81 சதவீதத்திற்கும் அதிகமானோர் நம்புவதாக தெரிவித்து உள்ளனர்.
- இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 46 சதவீதம் பேர் லாக்டவுன் காலத்திற்கு முன்பு இரவு 11 மணிக்கு முன்னரே தூங்க சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் இப்போது 39 சதவீதம் பேர் மட்டுமே இரவு 11 மணிக்கு முன்பு படுக்கைக்குச் செல்கிறார்கள்.
- இதேபோல், பதிலளித்தவர்களில் சுமார் 25 சதவீதம் பேர் லாக்டவுன் காலத்தில் சாதாரண சூழ்நிலைகளில் கூட இரவு 12 மணிக்கு தான் படுக்கைக்குச் செல்கின்றனர்.
- மேலும், 35 சதவீதம் பேர் 12 மணிக்குக்குப் பிறகு தான் படுக்கைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். இது இரவு நேர ஸ்லீப்பர்களில் (late night sleepers) 40 சதவீதம் உயர்வைக் குறிக்கிறது. இது போன்ற செயல்கள் இந்த லாக்டவுன் காலத்தில் தான் அதிகரித்து வருகிறது.
- கொரோனா வைரஸ் தொடர்பான வேலை பாதுகாப்பு, இந்த நேரத்தில் ஏற்பட்டு உள்ள பணத்தேவைகள் மற்றும் குடும்பம் / நண்பர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவது ஆகியவை பதிலளித்தவர்களிடையே தூக்கமின்மைக்கான காரணமாக கூறப்படுகின்றது. இது போன்ற பிரச்சினைகள் காரணமாக 49 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக