Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 2 மே, 2020

மத்திய அரசின் முடிவுக்கு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வரவேற்பு!

கொரோனா வைரஸ் கொள்ளை நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் விளைவாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மே 17ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஆன்லைன் வர்த்தகத் தொழிலை முழுவீச்சில் தொடங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. எனினும், சிவப்பு மண்டலங்களில் அத்தியாவசியமல்லாத பொருட்களை விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.

மக்களுக்கு ஊரடங்கால் கிடைக்காத பொருட்களையும், அவர்களுக்கு தேவையான பொருட்களையும் பாதுகாப்பாக விநியோகிப்பதற்கான அரசு எடுத்துள்ள முடிவுக்கு வரவேற்பளிக்கிறோம். இந்த முடிவால் லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களும், வர்த்தகர்களும் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்” என்று தெரிவித்தார்.

ஸ்னாப்டீல் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பேசுகையில், “நாடு முழுவதும் ஆன்லைன் வர்த்தகம் உட்பட பொருளாதார செயல்பாடுகளை தொடங்குவதற்கு உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அனுமதியை வரவேற்கிறோம். இதனால் லட்சக்கணக்கான சிறு வர்த்தகர்கள், சிறு குறு தொழில்கள் இயங்கி பொருளாதாரத்தை மீட்பதற்கு வழிவகை ஏற்படும்” என்று தெரிவித்தார்.

பேடிஎம் மால் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஸ்ரீநிவாஸ் மோதே பேசுகையில், “கோடை தொடங்கிவிட்டதால் வெப்பத்தை சமாளிப்பதற்காக ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்க பலரும் காத்துகிடக்கின்றனர். அரசின் முடிவு மக்களுக்கு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக