Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 18 மே, 2020

டிக்டாக் வீடியோவில் பாகுபலியாக மாறிய டேவிட் வார்னர்...வைரல் வீடியோ

டிக்டோக் வீடியோவில் பாகுபலியாக மாறிய டேவிட் வார்னர்...வைரல் வீடியோ
டிக்டாக் வீடியோவில், கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கவசம், சங்கிலி மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றைக் கொண்டு பாகுபலியின் பாத்திரத்தில் ஈடுபடுவதைக் காண்கிறோம்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டிக்டாக் செய்து மகிழ்வித்து வருகிறார். சமீப காலமாக இவர் செய்யும் டிக்டாக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் ஏற்கனவே, அல்லு அர்ஜுனின் அல வைகுந்தபரம்லு படத்தில் இருந்து புட்ட பொம்மா மற்றும் ராமுலு போன்ற பாடல்களுக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் டிக்டாக் செய்து அசத்தினார்.
தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடித்து உலகளவில் பிரபலமான பாகுபலி படத்தில் இடம்பெறும், 'அமரேந்திர பாகுபலி ஆகிய நான்' என்ற வசனத்தை பாகுபலி கெட்டப்பில் டிக்டாக் செய்து அசத்தி உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



ஐபிஎல் அணியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டனாக இருக்கும் டேவிட் வார்னர், தனது குடும்பத்தினருடன் ஏராளமான டிக்டோக் வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார். இந்திய பாடல்கள் மற்றும் திரைப்படங்களின் மீதான மோகத்திற்காக அவர் டிக்டோக்கில் குறிப்பாக பிரபலமானவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக